Odisha Train Accident LIVE: சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை!

Odisha Train Accident LIVE: சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து, மீட்பு பணிகள் குறித்த லைவ் செய்திகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 04 Jun 2023 09:36 PM
Odisha Train Accident LIVE: ரயில்வே வாரியம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை!

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. 

Odisha Train Accident LIVE: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழக்கவில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இருந்து யாரும் பாதிக்கப்படவில்லை என ஒடிஷா சென்று திரும்பியுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், “விரைவில் நல்ல செய்தி வரும். நாங்கள் மருத்துவமனை, சவக்கிடங்கு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ததில் தமிழர்கள் எவரும் இல்லை. அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபோதும் தமிழர்கள் அனுமதிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஒடிஷா ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலகவேண்டும் - ராகுல் காந்தி

ஒடிஷா ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலகவேண்டும் - ராகுல் காந்தி

ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் 128 கிமீ வேகத்தில் சென்றுள்ளது - அதிகாரி

ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் 128 கிமீ வேகத்தில் சென்றுள்ளது - அதிகாரி

ஒடிசா ரயில் விபத்து - உச்சநீதிமன்றத்தில் மனு

ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் “ரயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி  தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிடவும், ரயில் பயணங்களை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் உரிய ஆலோசனை வழங்கும் வகையில் ஆணையம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்” எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Odisha Train Accident LIVE: தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் நிலை என்ன?

கோரமண்டல் ரயிலில் தமிழ்நாட்டிற்கு  முன்பதிவு பெட்டியில் வந்து கொண்டிருந்த நரகாணி கோபி, கார்த்திக், ரகுநாத் மீனா, கமல், கல்பனா மற்றும் அருண் ஆகியோரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இவர்களைப் பற்றி தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசரகால உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுருத்தப்பட்டுள்ளனர்.  

Odisha Train Accident LIVE: கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

ரயில் தண்டவாளத்தில் உள்ள எலக்ட்ரானிக் இண்டர்ல்க்கில் ஏற்பட்ட கோளாறினால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது என தற்போது ஆய்வுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Odisha Train Accident LIVE: சிறப்பு ரயிலில் வந்தவர்களில் ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை..!

இன்று அதிகாலை ஒடிசாவில் இருந்து சென்னை வந்த சிறப்பு ரயிலில் வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 137 பேரில் ஒருவருக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ரயில்வே அமைச்சர் 2வது நாளாக ஆய்வு..

ஒடிசாவில் ரயில் விபத்து நடைபெற்ற பாலசோர் பகுதியில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார்.  அப்போது, சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். 

10 தமிழர்களின் நிலை என்ன?..

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை  என அதிகாரிகள் தகவல். அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன்  தமிழ்நாடு அரசு  அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த நிலையில் 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதிர் ரஞ்சன் சவுத்ரி நேரில் ஆய்வு..

ரயில்வேதுறையின் முன்னாள் இணை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அதிர் ரஞ்சன் சவுத்ரி, பால்சோரில் விபத்து நடந்த பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இருந்தனர்.

Odisha Train Accident LIVE: அடையாளம் காணப்பட முடியாத உடல்கள் - எய்ம்ஸ்க்கு மாற்றம்..!

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்படமுடியாத 191 உடல்கள் ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Odisha Train Accident LIVE: தமிழ்நாடு குழு ஆலோசனை..!

அமைச்சர் உதயநிதி தலைமையில் ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு குழு ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Odisha Train Accident LIVE: உருக்குலைந்த ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்..!

விபத்தில் உருக்குலைந்து போன ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Odisha Train Accident LIVE: மீட்கப்பட்ட 137 பேர் சென்னை வருகை; 8 பேர் காயம்..!

ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் மீட்கப்பட்ட 137 பேர் சென்னை வந்தடைந்தனர். இவர்களை சென்னை மத்திய ரயில் நிலையத்தில் வரவேற்ற தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், காயம் பட்டோருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை வந்தடைந்த 137 பேரில் 8 பேர் காயங்களுடன் வந்தடைந்துள்ளனர். 

Odisha Train Accident LIVE: உதவிக்கரம் நீட்டியவர்களுக்கு நன்றி - நவீன் படநாயக்..!

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் காப்பாற்றவும் உதவிய ஒடிசா மக்களுக்கும், ரத்ததானம் செய்த இளைஞர்களுக்கும் நன்றிகள் கூறி உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். 

Odisha Train Accident LIVE: விபத்துக்கு யார் காரணம்? தனிமனிதரா? அல்லது சிஸ்டமா?

ஒடிசா ரயில் விபத்தில் திமுக அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் இந்த விபத்துக்கு யார் காரணம்? தனிமனிதரா? அல்லது சிஸ்டமா? என்ற கேள்வியை மக்களவை உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 

Odisha Train Accident LIVE: தமிழ்நாடு குழுவை ஒடிசாவில் தங்கி மீட்பு பணிகளை கவனிக்க முதலமைச்சர் ஆணை..!

தமிழ்நாட்டில் இருந்து ஒடிசா சென்ற குழுவை அங்கேயே தங்கியிருந்து மீட்பு பணிகளை கவனிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒடிசா சென்ற தமிழ்நாட்டு குழுவினருடன் முதலமைச்சர மீட்புப் பணிகளின் நிலவரங்கள் குறித்தும், விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்தும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கேட்டறிந்தபோது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Odisha Train Accident LIVE: விபத்தில் பலியானவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை - குமார் ஜெயிந்த்

பயணிகள் பெயர் பட்டியலை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என மூத்த ஐஏஎஸ் அதிகாரி குமார் ஜெயிந்த் கூறியுள்ளார். மேலும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் அறிவித்துள்ளார். 

Odisha Train Accident LIVE: பலி எண்ணிக்கை 288ஆக உயர்வு..!

ஒடிசா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. 

Odisha Train Accident LIVE: விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் - பேட்டியில் பிரதமர் மோடி உறுதி..!

விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் பிரதமர் மோடி கூறினார். 

Odisha Train Accident LIVE: ஒட்டுமொத்த பலத்தையும் கொண்டு மீட்பு பணிகள் நடைபெறுகிறது - பிரதமர் மோடி பேட்டி..!

ஒட்டுமொத்த பலத்தையும் கொண்டு மீட்பு பணிகள் நடைபெறுகிறது என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் பிரதமர் மோடி கூறினார். 

Odisha Train Accident LIVE: ரயில் விபத்தில் பலியானோரை நினைக்கும் போது மனது வலிக்கிறது - பிரதமர் மோடி பேட்டி

ரயில் விபத்தில் பலியானோரை நினைக்கும் போது மனது வலிக்கிறது என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் பிரதமர் மோடி கூறினார். 

Odisha Train Accident LIVE: சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்திய பிரதமர்..!

ரயில் விபத்தில் காயமடைந்தோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

Odisha Train Accident LIVE: ஆய்வை முடித்துவிட்டு புறப்பட்டார் மோடி..!

விபத்து நடந்த இடத்தில் ஆய்வை முடித்துவிட்டு கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கட்டாக் சென்று பார்க்கவுள்ளார். 

Odisha Train Accident LIVE: ஒடிசா ஆளுநர் மருத்துவமனையில் ஆய்வு...!

ரயில் விபத்தில் காயம் அடைந்து சோரோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபர்களை சந்தித்து ஒடிசா ஆளுநர் ஆறுதல் கூறினார். 

Odisha Train Accident LIVE: ரயில் விபத்து - 3 பேர் சென்னை வந்தடைந்தனர்..!

ஒடிசா ரயில் விபத்தில் இருந்து சிறு காயங்களுடன் தப்பித்த பயணிகள் 3 பேர் சென்னை வந்தடைந்தனர். 

Odisha Train Accident LIVE: ஒடிசா ரயில் விபத்து - சம்பவ இடத்தில் அமைச்சர்கள்..!

அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஹலிகாப்டர் மூலம் பாலசோர் சென்றடைந்தனர். தற்போது, விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

Odisha Train Accident LIVE: தமிழ்நாட்டிலிருந்து ஒடிசா விரைந்தது மீட்புக்குழு..!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர், புவனேஷ்வரில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்தது மீட்புக்குழு

Odisha Train Accident LIVE: ஒடிசா ரயில் விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டானின் இன்று மாலை ஆலோசனை. முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனையில் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Odisha Train Accident LIVE: பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு, உடனடியாக ரத்து..!

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு, உடனடியாக அதை ரத்து செய்ததால் விபரீதம். 

Odisha Train Accident LIVE: தவறான சிக்னல் கொடுத்ததால் விபத்து..!

ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்ததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. 

Odisha Train Accident LIVE: மீட்பு பணியில் உதவிய உள்ளூர் மக்கள்..!

ரயில் விபத்துக்குள்ளானபோது உள்ளூர் மக்கள் அதிகளவில் உதவியாக கூறப்படுகிறது. 

Odisha Train Accident : ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் தொடங்கின

Odisha Train Accident : மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்தது. ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் தொடங்கின

Odisha Train Accident LIVE: ஒடிசா விரைகிறார் பிரதமர் மோடி..!

ரயில் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்ய ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி

Odisha Train Accident LIVE: ஒடிசா சென்றடைந்தனர் தமிழக அமைச்சர்கள்..!

விபத்தில் காயமடைந்த தமிழநாட்டை சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சிவசங்கர் ஒடிசா சென்றடைந்தனர். 

Odisha Train Accident LIVE: ஒடிசா புறப்பட்டார் மம்தா பானர்ஜி..!

ஒடிசா மாநிலத்திற்கு புறப்பட்டார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. 

மனதை உலுக்கும் ஒடிஷா விபத்து : சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில், 70 ஐசியூ படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன..

மனதை உலுக்கும் ஒடிஷா விபத்து : சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில், 70 ஐசியூ படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன..

Coromandel Express Accident LIVE: முழு விசாரணைக்கு உத்தரவு: ரயில்வே அமைச்சர்

3 ரயில்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்து குறித்து சுதந்திரமான முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளோம். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும். விபத்தில் காயம் அடைந்தோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 

ஒடிசா ரயில் விபத்து : பிரதமர் மோடி ஆலோசனை

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி

Train Accident : விபத்து நடந்த இடத்துக்கு விரைகிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

Train Accident : விபத்து நடந்த இடத்துக்கு விரைகிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

சிறப்பு ரயில் மூலம் சென்னை திரும்பும் 200க்கும் மேற்பட்ட பயணிகள்

ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில் மூலம் சென்னை திரும்புகின்றனர்.

சிறப்பு ரயில் மூலம் சென்னை திரும்பும் 200க்கும் மேற்பட்ட பயணிகள்

ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில் மூலம் சென்னை திரும்புகின்றனர்.

இரவு, பகலாக தொடரும் மீட்பு பணி - ரயில் விபத்து நடந்த இடத்திற்கு ராணுவம் விரைந்தது

ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில், மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். முன்னதாக தேசிய, மாநில மீட்பு படையினர் விமானம் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

Coromandel Express Accident LIVE: ஒடிசா ரயில் விபத்து - தமிழ்நாடு அரசு நிவாரணத்தொகை அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் 

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேரில் ஆய்வு

ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மத்திய ரயில்வே அமைச்சருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

சென்னை வர 867 பயணிகள் முன்பதிவு

தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் கூறுகையில், “விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலில் சென்னை வர 867 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். காயமின்றி தப்பியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை அழைத்துவரப்பட உள்ளனர். முன்பதிவு விவரங்களை வைத்து உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய, பல்வேறு பகுதியில் இருந்தும் பாலசோரில் மக்கள் குவிந்து வரும் நெகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய, பாலசோரில் மக்கள் குவிந்து வரும் நெகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

Odisha Train Accident : ஒடிஷா ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதுவரை 120 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Odisha Train Accident : ஒடிஷா ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதுவரை 120 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கோரமண்டல் விரைவு ரயில் ரத்து

இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பவேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் ரத்து செய்யபட்டுள்ளது. 

கட்டுப்பாட்டு மையத்துக்கு செல்லும் முதலமைச்சர்

இன்று காலை 8 மணிக்கு தமிழ்நாடு கட்டுப்பாட்டு மையத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு ஆய்வு செய்த பிறகு 8.15 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். 

பாஜக நிகழ்ச்சிகள் ரத்து

ஒடிசா ரயில் விபத்து காரணமாக பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசா ரயில் விபத்து - தலைவர்கள் இரங்கல்

சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இதையடுத்து வந்த இரண்டு ரயில்களும் விபத்திற்குள்ளானது. இதில் 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 


இதையடுத்து இந்த ரயில் விபத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரௌபதி முர்மு வெளியிட்ட ட்வீட்டில், “ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். மீட்புப்பணிகள் வெற்றி அடையவும், காயம் அடைந்தவர்கள் விரைவாக நலமடையவும் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து

ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழ்நாடு முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை ஆகிய 2 நிகழ்ச்சிகள் மட்டுமே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க்கண்காட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் நிகழ்ச்சிகள்  ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ரயில்கள் ரத்து

கோரமண்டல் ரயில் விபத்து காரணமாக 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. 

3 ரயில்கள் விபத்து காரணமாக, ஹவுரோ முதல் பெங்களூரு வரை செல்லும் துரந்தோ ரயில்

3 ரயில்கள் விபத்து காரணமாக, ஹவுரோ முதல் பெங்களூரு வரை செல்லும் துரந்தோ ரயில்

Train Accident : ஒடிஷா ரயில் விபத்து : ரயில் விபத்து எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவு - ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

Train Accident : ஒடிஷா ரயில் விபத்து : ரயில் விபத்து எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவு - ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

Coromandel Express Accident : ஒடிஷா ரயில் விபத்தில் 600 பேர் வரை காயமடைந்திருப்பதாக ஒடிஷா தலைமை செயலாளர் தகவல்

ஒடிஷா ரயில் விபத்தில் 600 பேர் வரை காயமடைந்திருப்பதாக ஒடிஷா தலைமை செயலாளர் தகவல்

Coromandel Express Accident : ஒடிஷா ரயில் விபத்தில் 600 பேர் வரை காயமடைந்திருப்பதாக ஒடிஷா தலைமை செயலாளர் தகவல்

ஒடிஷா ரயில் விபத்தில் 600 பேர் வரை காயமடைந்திருப்பதாக ஒடிஷா தலைமை செயலாளர் தகவல்

கோரமண்டல் ரயில் விபத்து : A1, A2, B2, B3, B4, B5, B6, B7, B8, B9 ஆகிய பெட்டிகள், தடம் புரண்ட பெட்டிகள் என்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாளியுள்ளது.

கோரமண்டல் ரயில் விபத்து : A1, A2, B2, B3, B4, B5, B6, B7, B8, B9 ஆகிய பெட்டிகள், தடம் புரண்ட பெட்டிகள் என்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாளியுள்ளது.

கோரமண்டல் ரயில் விபத்து : போக்குவரத்து துறை அமைச்சர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஒடிஷா விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கோரமண்டல் ரயில் விபத்து : போக்குவரத்து துறை அமைச்சர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஒடிஷா விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 தொகையையும் நிவாரண உதவியாக அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 தொகையையும் நிவாரண உதவியாக அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி





Coromandel Express Accident : கோரமண்டல் ரயில் விபத்தில் 70 பேர் உயிரிழந்ததாகவும், 350-க்கும் மேற்பட்டோர் காயமுற்றிருப்பதாகவும் பி.டி.ஐ தெரிவித்துள்ளது

Coromandel Express Accident : கோரமண்டல் ரயில் விபத்தில் 70 பேர் உயிரிழந்ததாகவும், 350-க்கும் மேற்பட்டோர் காயமுற்றிருப்பதாகவும் பி.டி.ஐ தெரிவித்துள்ளது

கோரமண்டல் ரயில் விபத்து : 70 பேர் உயிரிழப்பு என பி.டி.ஐ தகவல்

கோரமண்டல் ரயில் விபத்து : ‘தமிழக பயணிகள் விவரம் சேகரிக்கப்படுகின்றன’ - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்..

கோரமண்டல் ரயில் விபத்து : ‘தமிழக பயணிகள் விவரம் சேகரிக்கப்படுகின்றன’ - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்..

கோரமண்டல் ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல்

கோரமண்டல் விபத்தில் காயமடைந்த பயணிகள்.. சென்னையில் 3 மருத்துவமனைகள் தயார் நிலை

கோரமண்டல் விபத்தில் காயமடைந்த பயணிகள்.. சென்னையில் 3 மருத்துவமனைகள் தயார் நிலை

கோரமண்டல் விபத்து: தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டு அறை எண்கள்

விபத்து குறித்து தகவல்களுக்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது


தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டு அறை எண்கள்


Toll Free No. 1070
Mobile No. 94458 69843
WhatsApp No. 94458 69848
Landline 044-2859 3990

கோரமண்டல் ரயில் விபத்து : மீட்பு பணிகளை விரைவுபடுத்த பாமக வலியுறுத்தல்

சென்னை கோரமண்டல் தொடர்வண்டி தடம்புரண்ட விபத்து; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

Coromandel Express Accident : கோரமண்டல் ரயில் விபத்து : மீட்புப் பணியில் மொத்தமாக 120 பேர் தற்போது ஈடுபட்டுள்ளனர்

Coromandel Express Accident : கோரமண்டல் ரயில் விபத்து : மீட்புப் பணியில் மொத்தமாக 120 பேர் தற்போது ஈடுபட்டுள்ளனர்

Coromandel Express Accident : கோரமண்டல் விபத்து : காயமடைந்தவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்.

கோரமண்டல் விபத்து : காயமடைந்தவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்.

Coromandel Express Accident : காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு 2 லட்சம் நிவாரண உதவி - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Coromandel Express Accident : காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு 2 லட்சம் நிவாரண உதவி - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு 

தமிழக அமைச்சர் சிவசங்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் குழு நாளை காலை முதல் விமானத்தில் ஒடிசா விரைகிறது

தமிழக அமைச்சர் சிவசங்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் குழு நாளை காலை முதல் விமானத்தில் ஒடிசா விரைகிறது 

விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன.. மீட்புப்பணிகள் தீவிரம்

விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன..  மீட்புப்பணிகள் தீவிரம் 

கோரமண்டல் ரயிலில் சென்னை வருவதற்கு 800-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்ததாக தகவல்

கோரமண்டல் ரயிலில் சென்னை வருவதற்கு 800-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்ததாக தகவல் 

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து 200-க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து 200-க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Coromandel Express derailed : கோரமண்டல் ரயில் விபத்து குறித்து அறிந்து வேதனையடைந்துள்ளேன் - பிரதமர் மோடி

Coromandel Express To Chennai : கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் கவிழ்ந்துள்ளதாக தகவல்

Coromandel Express To Chennai  : கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் கவிழ்ந்துள்ளதாக தகவல்

கோரமண்டல் ரயில் விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது - பி.டி.ஐ

கோரமண்டல் ரயில் விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது - பி.டி.ஐ

ரயிலில் பயணித்தோரின் விவரம் அறிய அவசர எண்கள் அறிவிப்பு

ரயிலில் பயணித்தோரின் விவரம் அறிய அவசர எண்களை அறிவித்தது தெற்கு ரயில்வே 


சென்னை அவசர உதவி எண்கள் அறிவிப்பு : Chennai helpline numbers: 044- 25330952, 044-25330953 &  044-25354771.

Coromandel Express To Chennai : சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்து

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொல்கத்தாவில் இருந்து இன்று மதியம் 3:20 மணிக்கு கிளம்பிய ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சரக்கு ரயிலுடன் மோதியதால் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Background

Coromandel Express Accident LIVE:


ஒடிசாவில் பயங்கர ரயில் விபத்து(Odisha Train Accident) ஏற்பட்டுள்ளது. பாலசோர் நகரில் உள்ள பஹானாகா ரயில் நிலையத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில்(Coromandel Express Accident) சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணியில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.


சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ்:


சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதியதால் தடம் புரண்டுள்ளது. இன்று மதியம் 3:20 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து இந்த ரயில் கிளம்பியுள்ளது. அவசர உதவிக்கு 6782262286 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஷாலிமார்-கோரோமண்டல் விரைவு ரயில் இன்று மாலை பாலசோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இதில், வெளியூர் சென்ற மக்கள் கடுமையாகப் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.









 


அவசர உதவி எண் அறிவிப்பு:


எங்கள் மக்களின் நலனுக்காக ஒடிசா அரசு மற்றும் தென்கிழக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைத்து வருகிறோம். எங்களின் அவசரகால கட்டுப்பாட்டு அறை 033- 22143526/ 22535185 என்ற எண்களுடன் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. உதவிக்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.


ஒடிசா அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் 5-6 பேர் கொண்ட குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்புகிறோம். தலைமைச் செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.


விபத்தில் படுகாயம் அடைந்த 132 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்ஆர்சி) மற்றும் மூத்த அதிகாரிகள் ஹேமந்த் சர்மா, பல்வந்த் சிங், அரவிந்த் அகர்வால், டிஜி தீயணைப்பு சேவைகள் ஆகியோர் ரயில் விபத்து ஏற்பாடுகளை மேற்பார்வையிட சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.

 

ரயில் விபத்து தொடர்பாக ஒடிசா  முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சென்னைக்கான அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.  044- 25330952, 044-25330953, 044-25354771 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், 2009ஆம் ஆண்டிலும் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது. அதில், 161 பேர் படுகாயமடைந்த நிலையில், 16 பேர் உயிரிழந்தனர்.

 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.