ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் சட்டத்துறை அமைச்சராக பிரதாப் ஜேனா பொறுப்பு வகித்து வருகிறார். மகாங்கா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் மாலை தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். மாகாங்கா தொகுதியில் உள்ள கோகான் பஞ்சாயத்தில் பாஞ்சா மந்தப் என்ற அமைப்பு நடத்திய “சரத் உத்சவ்” என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியின்போது, பிரதாப் ஜேனா என்பவருக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் பொன்னாடை அணிவிக்க வந்தார். அப்போது, திடீரென கூட்டத்தில் இருந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன் காலில் அணிந்திருந்த ஷூ-வை கழற்றி அமைச்சர் பிரதாப் ஜேனா மீது எறிந்தார்.
அதிர்ஷ்டவசமாக அந்த ஷூ அமைச்சர் மீது படவில்லை. ஆனால், அவரது தனிப்பாதுகாவலர் மீது அந்த ஷூ விழுந்தது. விழாவில் பங்கேற்ற அமைச்சர் மீது திடீரென ஷூ வீசப்பட்டதால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அமைச்சர் மீது ஷூ வீசிய நபரை அனைவரும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
உடனடியாக அமைச்சரின் ஆதரவாளர்கள் ஷூ வீசிய நபரை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர். பின்னர், அவர்களிடம் இருந்து ஷூ வீசிய நபரை காவல்துறையினர் மீட்டனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காலணி மீது ஷூ வீசிய நபர் ஸ்வைன் என்று கண்டறியப்பட்டது.
மேலும், அவர் சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்றும், அவர் எஸ்.சி.பி. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்வைனின் மனநலம் கருதி அவர் மீது காவல்துறையினர் எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை. மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட ஸ்வைனை அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையினர் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க : மனைவிக்கு தெரியாம உரையாடலை பதிவு செய்வீர்களா..? கணவனை கண்டித்த உயர்நீதிமன்றம்!
மேலும் படிக்க : Indonesia | இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவித்த அரசு!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்