நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று அயோத்தியில் நடைபெற்றது. பல மாநில முதலமைச்சர், பல மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், இந்தியாவில் உள்ள தொழில், திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைத்தார்.


அயோத்தி ராமர் கோயில்:


ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு பல கலைஞர்களும் தங்களது வித்தியாசமான திறமை மூலமாக ராமர் கோயில் திறப்பை கொண்டாடி வருகின்றனர். ஒடிசாவில் வசித்து வருபவர் சஸ்வத் ரஞ்சன். இவர் ஒரு சிற்ப கலைஞர். இவர் ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாட வித்தியாசமான ஒன்றை செய்ய ஆசைப்பட்டுள்ளார்.


இதையடுத்து, இவர் தீக்குச்சிகளை பயன்படுத்தி ராமர் கோயிலை உருவாக்க முடிவு செய்துள்ளார். இதற்காக இவர் 900க்கும் அதிகமான தீக்குச்சிகளை பயன்படுத்தியுள்ளார். 900 தீக்குச்சிகளை பயன்படுத்தி அச்சு, அசல் ராமர் கோயிலின் மாதிரி தோற்றத்தை இவர் உருவாக்கியுள்ளார்.






936 தீக்குச்சிகள்:


இதை செய்து முடிக்க சஸ்வத் ரஞ்சனுக்கு 6 நாட்கள் ஆகியுள்ளது. இந்த ராமர் கோயிலை பயன்படுத்த அவர் துல்லியமாக 936 தீக்குச்சிகளை பயன்படுத்தியுள்ளார். தீக்குச்சிகளால் அவர் உருவாக்கியுள்ள ராமர் கோயில் 14 இன்ச் நீளமும், 7 இன்ச் அகலமும் கொண்டது. இதுதொடர்பாக பேசிய சஸ்வத் ரஞ்சன் தீக்குச்சிகளை பயன்படுத்தி இதைவிட சிறிய அளவில் ராமர் கோயிலின் மாதிரியை உருவாக்க முடியாது என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.


தற்போது அவர் உருவாக்கிய ராமர் கோயிலின் மாதிரி தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ராஜஸ்தானைச் சேர்ந்த கின்னஸ் சாதைனையாளர் பென்சில் நுனியில் குழந்தை ராமர் சிலையை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். நாக்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலைஞர் 7 ஆயிரம் கிலோ அல்வா படைத்து, அதற்கு ராம் அல்வா என்று பெயர் சூட்டியுள்ளார். இதுபோன்று பலரும் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல வித்தியாசமான நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!


மேலும் படிக்க: Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்- முக்கிய முகங்கள் இவர்கள்தான்!