NTR Daughter Death: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகள் உமா மகேஷ்வரி ஹைதரபாத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


என்.டி.ராமாராவின் நான்கு மகள்களில் உமா மகேஷ்வரி நான்காவது மகள். இவர் தான் என்.டி.ராமாராவின் இளைய மகள்.  உமா மகேஷ்வரியும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் மனைவியும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் சகோதரன் தான் அண்மையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற RRR படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர். 






 


 


ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் உமா மகேஷ்வரி. சிகிச்சை பெற்று வந்த நிலையில் உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று வீட்டின் படுக்க அறையில் உள்ள ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  நீண்ட நேரமாக படுக்கை அறையில் இருந்து உமா மகேஸ்வரி வெளியே வராததால்  குடும்பத்தினரிடையே சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை தட்டி உள்ளனர். நீண்ட நேரமாக எந்த பதிலும் வராததால், கதவை  உடைத்து பார்த்த போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் வரவழைக்கப்பட்டனர். உடலை மீட்ட போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.   


நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்த உமா மகேஷ்வரி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார், நோயின் தாக்கம் குறையாத காரணத்தினால், வீட்டை விட்டே வெளியே செல்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  என்.டி.ஆரின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து தற்கொலை, விபத்து என உயிரிழந்து வருவது பெரும் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண