சபரிமலை கோயிலுக்கு செல்ல இனி இது அவசிமல்ல - ஹேப்பி நியூஸ் சொன்ன தேவஸ்தானம்

தரிசன முன்பதிவு செயல்பாடுகள் முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஆணை பிறப்பிக்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தேவஸ்தானம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Continues below advertisement

கேரள சபரிமலை கோயிலுக்கு செல்ல இனி கொரோனா சான்றிதழ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசுகையில், "கொரோனா தொற்று காரணமாக பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி கேரள அரசால் தொடங்கப்பட்டது. இதை கேரள காவல்துறையினர் நிர்வகித்து வந்தனர்.

இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?

தரிசன முன் பதிவு செயல்பாடுகள் முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஆணை பிறப்பிக்கக் கோரி கேரள உயர் நீதி மன்றத்தில் தேவஸ்தானம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணையின் போது, தேவஸ்தானத்திற்கு ஆதரவான தீர்ப்பை கேரள உயர் நீதி மன்றம் வழங்கியது. 

இதைதொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செயல்பாடுகள் இனி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வராத பட் சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும். நிலக்கல் உள்பட முக்கிய இடங்களில் உடனடி தரிசன முன் பதிவு செய்ய கூடுதல் வசதிகள் செய்யப் படும். ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி உடனடி தரிசன அனுமதிக்கு முன்பதிவு செய்யலாம். இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை.

சபரிமலை சன்னிதானத்தில் 18-ம் படிக்கு மேல்பகுதியில் நகரும் ல கூரை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். ரூ.1.5கோடி செலவில் பம்பையில் அலங்கார வளைவு அமைக்க கேரள உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும். 

பாதுகாப்பு ஊழியர்கள் தங்கவும், ஓய்வெடுக்கவும் புதிய அறைகள் கட்டப்படும், தகவல் மையமும் தொடங்கப்படும். பம்பை மலை முகடு முதல் கணபதி கோயில் வரை பம்பை ஆற்றின் குறுக்கே ரூ.15 கோடி செலவில் 165 மீட்டர் நீளத்தில் பாலம் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement