Sitharaman on Hospital GST:  மருத்துவமனையில் ஒருநாள் பெட் வாடகை ரூ5,000 செலுத்துபவர்களிடம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். 


பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூலை 18) முதல் நடைபெற்று வருகிறது. இதில், ஜிஎஸ்டி மற்றும் விலைவாசி உயர்வு குறித்து விவாதங்கள் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 2) நடந்த விவாதத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது, சிகிச்சைக்கு வேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது  பெட் அல்லது ஐசியூவிற்கு ஒருநாள் வாடகை ரூபாய் 5,000 மற்றும் அதற்கு கீழ் செலுத்துபவர்களுக்கு  ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது பாராளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியுள்ளது.  உயிர் காக்கும் மருத்துவத்தில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவு மனிதாபிமானமற்றது என எதிர்கட்சியினர் தெரிவித்துவந்தனர்.  


ஏற்கனவே, 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினால், பென்சில், ரப்பர், மேகி போன்றவை உட்பட பல்வேறு அத்தியாவசியப் பொருடகாளுக்கான விலையும் உயர்ந்தது. தற்போது பொன்சில் விலை உயர்ந்துள்ளதை அடுத்து, ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயதுக் குழந்தை கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார். உத்திரப் பிரதேசம், கன்னோஜ் மாவட்டத்தினைச் சேர்ந்தவர், விஷால் டூபே. வழக்கறிஞரான இவரின் ஆறு வயதுக் குழந்தை, கீர்த்தி டூபே. ஒன்றாம் வகுப்பு படிக்கும் இவர் பள்ளியில் பென்சிலை தொடர்ந்து தவற விட்டுள்ளார். இதனால் தனது அம்மாவிடம், பென்சில் வாங்கித் தரச் சொல்லி கேட்டு தனது அம்மாவிடம் திட்டும் வாங்கியுள்ளார். தனது அம்மா தன்னை கடுமையாக திட்டுவதற்கான காரணம், ஜிஎஸ்டி உயர்வால் பென்சில், ரப்பர் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது தான் என்பதை புரிந்து கொண்ட கீர்த்தி டூபே பிரதமர் மோடிக்கு பென்சில், ரப்பர், மேகி போன்றவற்றின் விலையைக் குறைக்க கோரிக்கை கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார்.


அந்தக் கடித்தத்தில், எனது பெயர் கீர்த்தி டூபே. நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன். தற்போது நீங்கள் ஏற்படுத்தியுள்ள விலைவாசி உயர்வால், பென்சில், ரப்பர் போன்றவைகளின் விலை அதிகரித்துள்ளது. நான் எனது அம்மாவிடம் பென்சில் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டால் அவர் என்னை அடிக்கிறார். எனது பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகள் எனது பென்சிலை திருடிவிடுகிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த மேகியின் விலையையும் அதிகரித்து விட்டீர்கள், இப்போது நான் என்ன செய்ய? என தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியும் உள்ளார். குழந்தை கீர்த்தி டூபே இந்த கடிதத்தினை இந்தி மொழியில் எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் நாடு முழுவதும் வேகமாக வைரல் ஆனது. 


மத்திய அரசின் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அடுத்து பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளன. அந்த வரிசையில் அறிவியல் உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் அதிகரித்துள்ளது.  அண்மையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் நடைபெற்றதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் அத்தியாவசிய பொருட்களின் மீது 5% ஜிஎஸ்டி விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த ஜிஎஸ்டி விகித உயர்வு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்த கடிதத்தினை சுட்டிக்காட்டி மக்களவையில், ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்த விவாதத்தின்போது, மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார்.  மற்ற குழந்தைகள் பென்சிலை வாங்க முடியாமல் திருடும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது மத்திய அரசு என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.