இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆவது அலையின் தாக்கமே தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அடைய செய்துள்ளது. இதில், மகாராஷ்டிராவில் தொற்று பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.




இந்நிலையில், டெல்லியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க, வரும் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.