மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட 5 வயது மாணவனுக்கு நிவாரணமாக 50,000 ரூபாய் வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மனிதாபிமானமே இல்ல.. மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்
மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 வயது மாணவனை ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய வழக்கில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளின் பேரில், பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமாக ரூ. 50,000-ஐ மத்தியப் பிரதேச அரசு வழங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு நிபந்தனை சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, ஆணையத்தின் அறிவிப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தவறு செய்த உதவியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், வகுப்பு ஆசிரியர் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நடந்தது என்ன?
வகுப்பு ஆசிரியர், அந்த ஐந்து வயது மாணவனை உதவியாளரிடம் அனுப்பி இருக்கிறார். அவர் தனது அழுக்கு துணிகளை துவைத்து அணியுமாறு மாணவனை கட்டாயப்படுத்தினார். இதன் விளைவாக, அவருக்கு நோய் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது.
இதுகுறித்து ஆணையம் கடந்த ஜனவரி 23ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. பதிவில் உள்ள விஷயங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட உதவியாளரும் வகுப்பு ஆசிரியரும் கட்டாயப்படுத்தி, முழு வகுப்பினருக்கும் முன்பாக குழந்தைக்கு மன மற்றும் உடல் ரீதியான துன்பத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று ஆணையம் கண்டறிந்தது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 இன் பிரிவு 17, எந்தவொரு குழந்தையும் உடல் ரீதியான தண்டனை அல்லது மன ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகுவதைத் தடை செய்கிறது.