முதல் முறையாக, 30 கிலோவாட் லேசர் அடிப்படையிலான ஆயுத அமைப்பைப் பயன்படுத்தி விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் திரள் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் திறனை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. அத்தகைய திறனைக் கொண்டுள்ள அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள உயர் ஆற்றல் அமைப்புகள் மற்றும் அறிவியல் மையம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முதன்மையான மையமான DRDO, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் லேசர் ஆயுதத்தை DEW MK-II(A) வெற்றிகரமாக சோதனை நடத்தியது. 

இச்சோதனையில் ஆளில்லா வான்வழி விமானங்கள் மற்றும் ட்ரோன்களை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் DRDO தெரிவித்துள்ளது. இந்த வெற்றிகரமான சோதனையின் மூலம், அதிக சக்தி வாய்ந்த லேசர் DEW அமைப்பைக் கொண்ட உலகளாவிய சக்திகளின் பிரத்யேக நாடுகளின் கிளப்பில் இந்தியாவும் இணைந்துள்ளது என்று DRDO தெரிவித்துள்ளது.

Also Read: வியக்கவைக்கும் படங்கள்! விண்வெளியில் இருந்து படம் பிடிக்கப்பட்ட இந்தியா

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான சமீர் வி காமத் கூறுகையில், “ இது லேசர் ஆயுதத்தின் ஆரம்ப கட்டம்தான் . இந்த ஆய்வகம் மற்ற டிஆர்டிஓ ஆய்வகங்கள், தொழில் மற்றும் கல்வித்துறையுடன் அடைந்துள்ள சினெர்ஜியை விரைவில் இலக்கை நோக்கி எடுத்துச் செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். உயர் ஆற்றல் நுண்ணலைகள், மின்காந்த துடிப்பு போன்ற பிற உயர் ஆற்றல் அமைப்புகளிலும், ஸ்டார் வார்ஸ் திறனை வழங்கும் பல தொழில்நுட்பங்களிலும் டிஆர்டிஓ செயல்பட்டு வருவதாகவும் காமத் கூறினார்.