கடந்த ஆண்டில் 13.4 சதவீத ஆண்களுடன் ஒப்பிடுகையில் திருமணமாகாத இளம் வயதுப் பெண்களில் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே உடலுறவு கொண்டுள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  சமீபத்திய இந்த கண்டுபிடிப்புகளின்படி, 23-24 வயதுடைய ஆண்களில் 77 சதவீதத்திற்கும் அதிகமானோர் உடலுறவு கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 


தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 நடத்திய ஆய்வில், கடந்த 2019-21 திருமணமாகாத பெண்கள் ஆண்களை விட பாதுகாப்பான உடலுறவைக் கடைப்பிடித்துள்ளனர். அதேபோல், 15-24 வயதுக்குட்பட்ட திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களை ஆய்வு செய்த கணக்கெடுப்பில், 4.4 சதவீத ஆண்களிடம் ஒப்பிடுகையில் 15-19 வயதுக்குட்பட்ட  பெண்களில் 1.3 சதவீதம் பேர், கடந்த 12 மாதங்களில் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். 


707 மாவட்டங்களில் உள்ள 6 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களை ஆய்வு செய்ததில், பெண் குழந்தைகளை விட டீன் ஏஜ் சிறுவர்கள் பாலுறவில் அதிக சுறுசுறுப்பாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 2.9 சதவீத வாலிபப் பெண்களுடன் ஒப்பிடுகையில் 0.9 சதவீத டீன் ஏஜ் பெண்கள் உடலுறவு கொண்டுள்ளனர்.


மேலும், கடந்த 12 மாதங்களில் 18-19 வயதுக்குட்பட்டவர்களில் உடலுறவு கொண்ட பெண்களின் எண்ணிக்கை 1.9 சதவீதமாக இருந்தது. அதே வயதுடைய ஒற்றை ஆண்களின் எண்ணிக்கை 6.6 சதவீதமாக உள்ளது.


20-24 வயதுக்குட்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு, உடலுறவு கொண்ட ஆண்களில் 11.8 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 1.9 சதவீதமாக உள்ளது. இதேபோல்,10.9 சதவீத ஆண்களுடன் ஒப்பிடும்போது 20-22 வயதுக்குட்பட்ட பெண்களில் 1.9 சதவீதம் பேர் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். 


திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடையே ஆணுறை பயன்பாட்டை ஆய்வு செய்த இந்த கணக்கெடுப்பில், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் பாதுகாப்பான உடலுறவு மேற்கொள்கின்றனர். அதில்,  அவர்கள் டீன் ஏஜ் வயதினராக இருந்தாலும் சரி அல்லது பெரியவர்களாக இருந்தாலும் சரி பாதுகாப்பான உடலுவை மேற்கொள்கின்றனர். அதேபோல், 15-19 வயதுக்குட்பட்டவர்களில் 57 சதவீத ஆண்கள் மட்டுமே ஆணுறை பயன்படுத்துகின்றனர்.


20-24 வயதுடைய ஆண்களுக்கு ஆணுறைகளின் பயன்பாடு சற்று அதிகரித்துள்ளது. ஒற்றை ஆண்களில் கிட்டத்தட்ட 64 சதவீதம் பேர் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும், அதே வயதுடைய பெண்களில் 65.3 சதவீதம் பேர் ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் முதன்முறையாக இந்த வகை கணக்கெடுப்பை நடத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5, இந்தியாவில் 15-24 வயதுக்குட்பட்ட ஆண்களுடன் ஒப்பிடும்போது அதிகமான பெண்கள் கன்னிப்பெண்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.