உத்திரபிரதேசத்தில் அளவுக்கு அதிகமான வயகரா மத்திரைகளை உட்கொண்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரயக்ராஜ் நகரினைச் சேர்ந்த  28 வயதான இளைஞர் அதிக அளவு வயகரா உட்கொண்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரயக்ராஜுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகியிருந்த நிலையில் அவர் தனது தாம்பத்திய உறவில் திருப்தி இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


வயகரா


இதனால் தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது அன்றாட நடவடிகையில் பல்வேறு வகையான மாறுதல்கள் இருந்து வந்துள்ளது. இதனை அடையாளம் கண்ட அவரது நண்பர்கள் அவரின் மனஉளைச்சலுக்கான காரணத்தினை கேட்டு அறிந்துள்ளனர். அவர் தனது தாம்பத்திய உறவில் திருப்தி அடைய முடியாமல் போவதை தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அவரது நண்பர்கள் அவருக்கு வயகராவினை பரிந்துரைத்து, அதனை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.  எனவே தனது தாம்பத்திய உறவினை மேம்படுத்தும் நோக்கில் தனது நண்பர்கள் பரிந்துரைத்த வயாகராவினை முதலில் பயன்படுத்த தயங்கிய அவர், பின்னர் அதனை தினமும் பயன்படுத்த தொடங்கினார். வயகராவால் தனது தாம்பத்திய உறவில் திருப்தி அடைந்த அவர், அதன் பின் வயகராவுக்கு அடிமையாகிவிட்டதாக கூறப்படுகிறது. வயகராவுக்கு அடிமையான அவர், தினமும் அளவுக்கு அதிகமான வயகராவினை உட்கொண்டு வந்துள்ளார். 


அதிக அளவில் வயகரா உட்கொண்டதால் உடல் உபாதைகளை அனுபவிக்க தொடங்கி அவர், தொடக்கத்தில் யாரிடமும் சொல்லவில்லை. இருப்பினும் தொடர்ந்து வயகராவினை பயன்படுத்தி வந்துள்ளார். இதானால் மேலும் பாதிக்கப்பட்ட அவர்,  தனது பிறப்பு உறுப்பில் அதிகப்படியான நடுக்கத்தினை உணர்ந்துள்ளார். இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  


நான்கு நாட்களுக்கான வயகரா ஒரே நாளில் 


அவரினை முழுவதுமாக பரிசோதித்த மருத்துவர்கள் அவர் தொடர்ந்து அதிகப்படியான வயகராவினை உட்கொண்டு வந்துள்ளார் எனவும், சம்பவத்தன்று  200 மி.கி அளவிலான வயகராவினை உட்கொண்டுள்ளார் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இது நான்கு நாட்களுக்கு பயன்படுத்தும் அளவு எனவும் கூறியுள்ளனர்.


அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு இனி அவருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் இருக்கும் எனவும், அதேநேரத்தில் அவர் முழுவதும் குணமடைந்த பின்னர் இயல்பு வாழ்க்கையினை வாழலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது இடுப்பில் உள்ள கட்டியினை மறைக்க அவர் தனது வாழ்நாள் முழுவதும் துணியினை கட்ட வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண