தமிழ்நாட்டின் கோவை வழியாக வாரத்தில் 6 நாட்கள் பெங்களூரில் இருந்து கேரளாவில் எர்ணாகுளத்துக்கு இருமார்க்கமாக புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ரயில் பயணக் டிக்கெட் கட்டணம், நேர அட்டவணை குறித்த முக்கிய தகவல்கள்  வெளியாகியுள்ளது.

Continues below advertisement

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8 ம் தேதி பனாரஸ் - கஜூராஹோ, லக்னோ - சஹரன்பூர், ஃபெரோஸ்பூர் - டெல்லி மற்றும் எர்ணாகுளம் - பெங்களூரு இடையேயான புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இதில் எர்ணாகுளம் - பெங்களூர் வந்தே பாரத் ரயில் தமிழ்நாடு வழியாக இயங்குகிறது. இந்த ரயில் இன்று முதல் தனது சேவையை தொடங்கி உள்ளது. இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். புதன்கிழமை மட்டும் ரயில் சேவை இருக்காது. அதன்படி இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் கேஎஸ்ஆர் பெங்களூர் - எர்ணாகுளம் வந்தே பாரத் ரயில் (வண்டி எண் 26651) அதிகாலை 5.10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரயில் காலை 8.13 மணிக்கு சேலம் வந்து 8.15 மணிக்கு புறப்படும். ஈரோட்டுக்கு 9 மணிக்கு சென்று 9.05 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.

Continues below advertisement

காலை 9.45 மணிக்கு திருப்பூரை சென்றடையும் ரயில் 9.47 மணிக்கு புறப்படும். கோவைக்கு 10.33 மணிக்கு செல்லும் ரயில் அங்கிருந்து 10.35 மணிக்கு புறப்படும். அதன்பிறகு 11.28 மணிக்கு பாலக்காட்டை அடையும். அங்கிருந்து 11.30 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12.28 மணிக்கு திரிச்சூர் செல்லும். திரிச்சூரில் இருந்து 12.30 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

பெங்களூர் சிட்டியில் இருந்து எர்ணாகுளம் என்றால் Chair Car -ல் உணவு தவிர்த்து டிக்கெட் கட்டணம் ரூ.1,339.05 ஆக  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சைவ உணவு சேர்த்தால் டிக்கெட் கட்டணம் ரூ.1,679.05 ஆக உள்ளது. Executive Chair Car என்றால் சைவ உணவுடன் சேர்த்து டிக்கெட் கட்டணம் ரூ.3,038.60 ஆக உள்ளது. அதேபோல் பெங்களூரில் இருந்து சேலத்துக்கு டிக்கெட் கட்டணம் ரூ.566 (ரூ.1,182), ஈரோட்டுக்கு ரூ.665 (ரூ.1,383), திருப்பூருக்கு ரூ.735 (ரூ.1,534), கோவைக்கு 806 (ரூ.1,681), பாலக்காடுக்கு ரூ.876 (ரூ.1827), திரிச்சூருக்கு ரூ.1,009 (2,110) கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மறுமார்க்கமாக எர்ணாகுளம் - கேஎஸ்ஆர் பெங்களூர் வந்தே பாரத் ரயில் (26651) எர்ணாகுளத்தில் இருந்து தினமும் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு பெங்களூரை சென்றடையும். இந்த ரயில் மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு 3.17 மணிக்கு திரிச்சூர் வரும். திரிச்சூரில் 3.20 மணிக்கு புறப்படும் ரயில் 4.35 மணிக்கு பாலக்காடு வரும். பலாக்காட்டில் 4.37 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5.20 மணிக்கு கோவை வரும். கோவையில் 5.23 மணிக்கு புறப்படும் ரயில் 6.03 மணிக்கு திருப்பூர் செல்லும்.

திருப்பூரில் 6.05 மணிக்கு புறப்படும் ரயில் 6.45 மணிக்கு ஈரோடு செல்லும். ஈரோட்டில் 6.50 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.18 மணிக்கு சேலம் செல்லும். சேலத்தில் 7.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.23 மணிக்கு கேஆர் புரம் செல்லும். 10.25 மணிக்கு கேஆர் புரத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 11 மணிக்கு பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தை அடையும். எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு Chair Car -ல் உணவு இன்றி டிக்கெட் கட்டணம் ரூ.1,339.05 ஆக உள்ளது. சைவ உணவு சேர்த்தால் டிக்கெட் கட்டணம் ரூ.1,639.05 ஆக உள்ளது. Executive Chair Car என்றால் சைவ உணவுடன் சேர்த்து டிக்கெட் கட்டணம் ரூ.3,003.60 ஆக உள்ளது.

அதேபோல் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் வரும் ரயிலில் திரிச்சூருக்கு Chair car ரூ.293 (executive care ரூ.616), பாலக்காட்டுக்கு ரூ.384 (ரூ.809), கோவைக்கு ரூ.472 (ரூ.991), திருப்பூருக்கு ரூ.550 (ரூ.11,52), ஈரோட்டுக்கு ரூ.617 (ரூ.1,296), சேலத்துக்கு ரூ.706 (ரூ.1,470), கேஆர் புரத்துக்கு ரூ.1,079 (ரூ.2,257) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் தற்போது இயங்கும் ரயில்களில் பயண நேரம் 11 மணிநேரமாக உள்ளது. ஆனால் இந்த புதிய வந்தே பாரத் ரயில் மூலமாக எர்ணாகுளம் - பெங்களூரு இடையேயான பயண நேரம் 8 மணிநேரம் 40 மணிநேரமாக இருக்கும். இதன்மூலம் 2.20 மணிநேரம் வரை பயண நேரம் குறைகிறது.