New Labour Codes: புதிய தொழிலாளர் சட்டவிதிகள் நன்மை அளிக்கின்றனவா? சிக்கலை ஏற்படுத்துகின்றனவா? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


புதிய தொழிலாளர் விதிகள்:


பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய புதிய தொழிலாளர் விதிகளானது, கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் அமலுக்கு வந்ததுள்ளது. இதில், ஊதிய சட்டதொகுப்பு 2019, தொழில்துறை உறவுகள் சட்டதொகுப்பு 2020, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் (OSH) சட்ட தொகுப்பு 2020 மற்றும் சமூகப் பாதுகாப்பு குறியீடு 2020 ஆகியவை நான்கு தொகுப்புகளும் அடங்கும். இவை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கட்டாயமாக்குகின்றன, க்ராட்சுவிட்டி எனப்படும் பணிக்கொடை தகுதி காலத்தை ஒரு வருடமாகக் குறைக்கின்றன. வீட்டிலிருந்து வேலை செய்வதை அங்கீகரிக்கின்றன. இந்நிலையில் புதிய தொழிலாளர் விதிகள் 2025 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.



இனி ஒரே ஆண்டில் க்ராட்சுவிட்டி(Gratuity)


புதிய சட்டவிதிகளின்படி மிகப்பெரிய பலனாக, நிலையான கால ஒப்பந்தங்களில் உள்ள தொழிலாளர்களுக்கான மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறது. முன்பு நிறுவனத்திடமிருந்து க்ராட்சுவிட்டி என்ற பணிக்கொடையை பெற தொடர்ச்சியாக அங்கு 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டி இருந்தது. தற்போது அது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. பணிக்கொடை என்பது ஊழியரின் நீண்ட சேவையைப் பாராட்டுவதற்காக வழங்கப்படும் மொத்தத் தொகை பணப் பலனாகும். இதற்கான காலக்கெடுவை சுருக்கி இருப்பதால், குறுகிய கால மற்றும் திட்ட அடிப்படையிலான தொழிலாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்தும்.


குறைந்தபட்ச ஊதியம்:


ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக இருந்தாலும் சரி, அமைப்புசாரா துறையாக இருந்தாலும் சரி இனி குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படும். முன்னதாக, குறைந்தபட்ச ஊதிய விதிகள் மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் துறைக்கு துறை மாறுபடும். இதனால் பல தொழிலாளர்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியமின்றி பாதிக்கப்பட்டனர். ஆனால் புதிய கட்டமைப்பின் கீழ், மத்திய அரசு ஒரு தேசிய அடிப்படை ஊதியத்தையும் அறிமுகப்படுத்தும். எந்த மாநிலமும் அந்த நிலைக்குக் கீழே ஊதியத்தை நிர்ணயிக்க முடியாது. இது நாடு முழுவதும் அதிக சீரான தன்மையையும் நியாயமான ஊதியத்தையும் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மற்ற முக்கிய அம்சங்கள் என்ன?



  • வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அமைப்பு சாரா நிறுவனங்களும் இனி தங்களது புதிய ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும்

  • கூடுதல் நேரம் பணி செய்பவர்களுக்கு அதற்கு நிகராக இரட்டை ஊதியம் வழங்கப்பட வேண்டும்

  • ஊதியத்துடனான விடுமுறை சலுகையை பெற தற்போதுள்ள 240 நாட்கள் என்ற காலக்கெடு 180 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது

  • அனைத்து துறைகளிலும் பெண்களும் இரவு நேரத்தில் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணியாளர் சம்மதம் பெற்று, போதிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை நிறுவனம் ஏற்படுத்தி தர வேண்டும்

  • பணியாளர் மற்றும் நிறுவனம் இடையேயான பரஸ்பர முடிவின் அடிப்படையில், வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் வசதியானது அங்கீகரிக்கப்படுகிறது