டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகை முதல் நேதாஜி சிலை வரையிலான ராஜபாதை, கர்த்தவ்யா பாதை (கடமை பாதை) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம்:
சென்ட்ரல் விஸ்டா திட்டம், வரும் 8-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் ராஜபாதையின் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தினத்தின் போது, இந்த பாதையில் தான் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக செப்டம்பர் 7-ஆம் தேதி, டெல்லி முனிசிபில் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அந்த கூட்டத்திற்கு பிறகு பெயர் மாற்றம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்பாத் ராஜபாதை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாதையில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பை மக்கள் பலரும் நேரில் சென்று கண்டு மகிழ்வர்.
பிரதமர் உரை:
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின் போது, காலனி ஆதிக்கம் சம்பந்தமான அடையாளங்களை நீக்குவது தொடர்பாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ராஜ்பாத் பெயர் மாற்றம், அவரின் உரையின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது.
இனிமேல் ராஜ்பாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டு கர்த்தவ்யா பாத் என அழைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழில் கடமை பாதை (கர்த்தவ்யா பாத்) என அழைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கூடிய விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.