8 ஆண்டுகளில் ஒருமுறை கூட பிரதமராக தன்னை நினைத்ததில்லை என்று பிரதமர் மோடி சிம்லா மாநாட்டில் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் ஆன ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நாடெங்கும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் அண்ணாமலை உட்பட அனைத்து பாஜகவினரும் வாழ்த்து சொல்லிய நிலையில், இமாச்சல பிரதேசத்தில் பாஜக பெரும் மாநாட்டை நடத்தியது. அதன் நிறைவு விழாவாக இன்று மோடி கலந்துகொண்டு உரையாற்றி உள்ளார். திரளான தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மோடி உணர்வுப்பூர்வமான விஷயங்களை பேசினார்.
தேர்தல் வெற்றிகள்
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் தொடர்ந்து வந்த நிலையில், பாஜகவின் சார்பில் போட்டியிட்டு மோடி பிரதமரானார்.. தற்போது மோடி 2வது முறையாகவும் பிரதமராக பொறுப்பில் உள்ளார். முதலில், 2019ல் நடந்த தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, 353 இடங்களை கைப்பற்றியது. பாஜக மட்டும் அப்போது 303 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அப்போது முதல் முறையாக பிரதமர் மோடி பதவியேற்றார். இதன்பிறகு, 2019-ல் நடந்த தேர்தலில் மறுபடியும் மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
8 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
இந்த 2வது ஆண்டு ஆட்சிக்காலத்தின் 3வது ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது. 4-ம் ஆண்டில் மோடியின் ஆட்சி காலடி வைக்கிறது. இந்நிலையில், இதை பாஜக சிறப்பாக கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, சிம்லாவில் பாஜகவின் சிறப்பு மாநாடு இன்று நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, இந்தப்8 ஆண்டுகளில் தன்னை ஒரு முறை கூட பிரதமர் என்று நினைத்ததில்லை எனக் கூறியுள்ளார்.
மோடி பேச்சு
இந்த நிகழ்வில் பேசிய அவர், "கடந்த 8 ஆண்டுகளில், ஒருமுறைகூட என்னைப் பிரதமராக நான் நினைத்ததில்லை. கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டும்தான் எனக்குப் பிரதமர் பொறுப்பு உள்ளது. ஆனால், அந்த கோப்புகள் சென்றபிறகு நான் பிரதமர் இல்லை.130 கோடி மக்களின் பிரதான சேவகன் தான் நான். அவர்களே என் வாழ்வின் எல்லாமுமாக இருக்கிறார்கள். நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும்தான் என் வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்னிருந்த காங்கிரஸ் ஆட்சியில், குடும்ப அரசியல், ஊழல் பற்றி மட்டுமே மக்கள் பேசுவார்கள். ஆனால் மக்கள் இன்று அரசாங்கத்தின் திட்டங்கள், அவற்றின் பலன்கள் மற்றும் வளர்ச்சி குறித்துப் பேசுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் ஸ்டார்ட் அப்கள் உலகளவில் இன்று பேசப்படுகின்றன. உலக வங்கிகூட இந்தியாவின் எளிதாகத் தொழில் தொடங்கும் கொள்கைகளைப் பற்றிப் பேசுகிறது", என்று கூறினார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் 11-வது தவணையை விவசாயிகளுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.