NEET PG Exam:  முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


நீட் தேர்வு: 


எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீட் இளநிலை தேர்வில் (Neet UG) தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர்.


அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு என 42,500 இடங்கள் உள்ளன.  


ஜூலை 7ல் தேர்வு:






தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளதாக தெரிகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. 


இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.