✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

”என்னை யாரோ சுட்டுக் கொன்று விடுவார்களோ என தோன்றுகிறது”– அதிர்ச்சியளித்த ஃபரூக் அப்துல்லா

செல்வகுமார்   |  04 May 2024 08:28 PM (IST)

Farooq Abdullah: இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலையானது, ஹிட்லரின் ஆட்சியின் கீழ் இருந்த யூதர்களின் நிலை போன்றுதான் உள்ளது என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா

என்னை யாரோ சுட்டு கொன்று விடுவார்களோ என தோன்றுகிறது என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. 
 
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான ஃபருக் அப்துல்லா செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில், இந்தியாவில் இஸ்லாமியர்கள் அச்சம் கொள்ளும் வகையிலான சூழல் நிலவி வருவதாக தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் ( AIMIM ) கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியதில் என்ன தவறு உள்ளது.  இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் நிலையானது, ஹிட்லரின் ஆட்சியின் கீழ் இருந்த யூதர்களின் நிலை போன்றுதான் உள்ளது.( இஸ்லாமியர்களின் நிலையானது, ஹிட்லரின் ஆட்சியின் கீழ் இருந்த யூதர்களின் நிலை போன்றுதான் உள்ளது என அசாதுதீன் ஒவைசி  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.) 

”அச்சமான சூழ்நிலை உள்ளது”:

இந்தியாவில் இஸ்லாமியர்களை அச்சப்படுத்தும் வகையிலான சூழல் நிலவுகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான குற்றங்களை கணக்கிட்டு பாருங்கள். தற்போது சூழலை பார்க்கும் போது, எனக்கே அச்சமாகத்தான் உள்ளது. என்னை யாராவது கொன்று விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. என்னை லத்தியால் தாக்கி விடுவார்களோ எனவும் அச்சம் உள்ளது. 
 
Also Read: PM modi: என்னிடம் சைக்கிள் கூட இல்லை; ராகுல் பிரதமராக பாகிஸ்தான் பிரார்த்திக்கிறது - மோடி

பிரதமர் சர்ச்சை பேச்சு:

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்தும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்தும் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி தெரிவித்ததாவது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்துக்களின் சொத்துக்களை, அதிக குழந்தைகள் பெற்ற சமூகத்துக்கு காங்கிரஸ் கொடுக்க பார்க்கிறது என்று தெரிவித்தார். இந்த கருத்தானது மறைமுகமாக இஸ்லாமிய சமூகத்தினரை மோடி தாக்கி பேசினார் என்றும், மதவாத பிரச்னைகளை எழுப்ப பார்க்கிறார் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்நிலையில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான சூழல் உள்ளது என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Amit Shah: சிஏஏ அடிப்படையில் இந்த மாதம் முதல் குடியுரிமை வழங்கப்படும் - அமித்ஷா பேச்சு
Published at: 04 May 2024 08:28 PM (IST)
Tags: Congress pm modi BJP NCP jammu kashmir Farooq Abdullah
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்தியா
  • ”என்னை யாரோ சுட்டுக் கொன்று விடுவார்களோ என தோன்றுகிறது”– அதிர்ச்சியளித்த ஃபரூக் அப்துல்லா
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.