கடந்த மார்ச் 13 ஆம் தேதி தகவலின் அடிப்படையில், என்சிபி குழுவின் இம்பால் ( மணிப்பூர் ) மண்டல அதிகாரிகள், லிலாங் பகுதிக்கு அருகே ஒரு லாரியை இடைமறித்து, வாகனத்தை முழுமையாக சோதித்தனர். அதில் இருந்து 102.39 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது, லாரியில் இருந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, உடனடியாக பின்தொடர்தல் நடவடிக்கையை மேற்கொண்டு, லிலாங் பகுதியில் அந்தப் போதைப் பொருளைப் பெற இருந்த நபரையும் கைது செய்தனர் .
அசாம்-மிசோரம் எல்லை
மற்றொரு நடவடிக்கையாக, அதே நாளில், உளவுத் தகவலின் அடிப்படையில், என்சிபி-யின் குவஹாத்தி மண்டல அதிகாரிகள் சில்சார் அருகே அசாம்-மிசோரம் எல்லையில் ஒரு சொகுசு காரை இடைமறித்து, அதை முழுமையாக ஆய்வு செய்ததில், வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.48 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருளைப் பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்தவ ஓட்டுநரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க விசாரணை நடந்து வருகிறது.
அமித்ஷா பாராட்டு
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பதாவது , “ போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கருணை காட்ட மாட்டோம். ரூ. 88 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்ததற்காகவும், சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்ததற்காகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (என்சிபி) பாராட்டுக்கள். போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் சிறந்த செயல்திறனுக்கு இது ஒரு சான்றாகும்.
நடவடிக்கை தொடரும்:
"போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குக் கருணை காட்ட மாட்டோம். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பயணத்தை விரைவுபடுத்தும் வகையில், ரூ.88 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் அடங்கிய பெரிய அளவிலான சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 4 பேர் இம்பால், குவஹாத்தி மண்டலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு, இது ஒரு சான்றாகும். போதைப்பொருளைத் தடுப்பதற்கான எங்கள் நடவடிக்கை தொடரும். போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகமான என்சிபி-யின் குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என மத்திய அமைச்சர் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.