மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 29 அதிருப்தி எம்.எல்.ஏக்கள், ஆளும்  பாஜகவில் இணைந்துள்ளார். அஜித்பவார் தலைமையில் எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகையில் கூடினார்கள். இதனால் அஜித்பவார் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  இம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு  சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.






சரத்பவாருடனான பதவிச் சண்டையில் அஜித்பவார் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்பவாருடன் பாஜகவில் இணைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித்பவாருடன் கட்சியில் இணைந்த எம்.எல்.ஏக்களில் 8 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 


மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிகழ்விற்கு முன்னதாக, அஜித்பவார் தனது கட்சித் தலைவரான சரத்பவாருக்குத் தெரியாமல், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் கூட்டத்தைக் கூட்டினார். இந்த கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பால் மற்றும் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர், அதே நேரத்தில் மாநில கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கட்சியில் தான் கேட்ட பொறுப்பை சரத்பவார் தனக்கு தராதது அஜித்பவாருக்கு அதிருப்தியை ஏற்படுத்த, இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் புகைச்சல் கிளம்பியது. அதன் நீட்சியாக மகாராஷ்ட்ரா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்த அஜித்பவார் பாஜகவில் இணைந்தது மட்டும் இல்லாமல், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் கட்சியில் இருந்து பிரித்துக்கொண்டு போனது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக மாறியுள்ளது. 


மகாராஷ்ட்ராவில் மொத்தம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல். ஏக்கள் மொத்தம் 53 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவற்றில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களான 29 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் அஜித்பவார் இணைந்துள்ளார். கட்சித் தாவல் தடைச்சட்டத்தில் இருந்து தப்பிக்க அஜித்பவாருக்கு மொத்தம் 36 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.