தேசிய உலோகவியலாளர் விருதுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக எஃகு துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
உலோகவியலாளர் விருது:
உலோகவியலாளர்களை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் பிப்ரவரி-3ஆம் தேதி தேசிய உலோகவியலாளர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதானது, இரும்பு மற்றும் எஃகு துறையில் உற்பத்தி, ஆராய்ச்சி, வடிவமைப்பு, கல்வி, கழிவு மேலாண்மை, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு செய்த உலோகவியலாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.
தற்சார்பு இந்தியா இயக்கத்தின் நோக்கங்களை அடையும் வகையில், சிறப்பான முறையில் இத்துறையில் பங்களிப்பு செய்தவர்களுக்கும் இவ்விருது அளிக்கப்படுகிறது. இவ்விருதுக்கு நிறுவனங்களோ, அமைப்புகளோ அல்லது பொதுமக்களோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் உலோகவியலாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 11-ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தை https://awards.steel.gov.in/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சம்: இளங்கலை பட்டம் உலோகவியல் பொறியியல்/ பொருட்கள் அறிவியல் அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
5 பிரிவுகளில் விருது:
இவ்விருதானது வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய உலோகவியலாளர் விருது, இளைய உலோகவியலாளர் (சுற்றுச்சூழல் அறிவியல்), இளைய உலோகவியலாளர் (உலோக அறிவியல்), இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான விருது என ஐந்து விருதுகள் வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்ப்டும் முறை:
சோதனைக் குழு மற்றும் தேர்வுக் குழுவை உள்ளடக்கிய இரண்டு அடுக்கு வழிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்
தகுதிச் சோதனைக் குழுவானது விண்ணப்பங்கள் மற்றும் துணை ஆவணங்களைப் பரிசீலித்து, தகுதி நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது நிராகரித்தல் மற்றும் தெரிவுக் குழுவிற்கான விண்ணப்பங்களின் ஒன்றிணைந்த அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் செய்யும்.
தேர்வுக் குழு ஆவணங்களை ஆராய்ந்த பிறகு, நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின்படி மதிப்பெண்களை ஒதுக்கீடு செய்து, விருது பெற்றவர்களின் பட்டியலைப் பரிந்துரைக்கும்.
மேலும் விவரங்களுக்குWelcome to NMA Awards (steel.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்