சுடுகாட்டில் இறந்த உடலை தகனம் செய்யும்போது எரியும் உடல் மீது டீசலை ஊற்றிய 2 பேர் தீயில் கருகி பலியான சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் உடனிருந்த மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இறந்தவர் உடல் தகனம்


நாக்பூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள காம்ப்டி என்ற கிராமத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இறந்த அவரது உடலை தகனம் செய்வதற்காக மோக்சாதாம் காட் என்ற சுடுகாட்டிற்கு அந்த கிராம மக்கள் எடுத்துச் சென்றனர். அங்கு வழக்கம் போல மரக் கட்டையில் உடலை வைத்து, தீ வைத்தனர். உடல் தகனம் செய்யும் வேளையில் மழை கொட்டிதீர்த்துள்ளது.



பலத்த மழை


மழையின் காரணமாக தீ மரங்களுக்கு பற்றிக்கொள்வதற்கு தாமதமானது. எனவே அதனை வேகமாக எரிய வைக்க பல யுக்திகளை செய்து வந்தனர். அப்போது அந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 45 வயது சுதிர் டோங்கரே, 60 வயது திலிப் கோப்ரகடே, 50 வயது சுதாகர் ஆகிய 3 பேர் சேர்ந்து மெதுவாக பற்றி கொண்டிருந்த தீயை வேகமாக எரிய வைப்பதற்காக அதன் மீது டீசலை ஊற்றி உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: RasiPalan Today, July 30: கன்னிக்கு தன வரவு... தனுசுக்கு ஆதாயம்... உங்கள் ராசிக்கான பலன்கள் என்ன?


தீயில் கருகிய மூவர்


டீசலை எரியும் நெருப்பின் மீது ஊற்ற, அப்போது தீ திடீரென அந்த 3 பேரின் மீதும் வேகமாக பற்றியது. உடனே அங்கிருந்தவர்கள் உடனடியாக 3 பேரின் மீதும் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் விடாமல் பிடித்த தீயை எப்படியோ சேர்ந்து அணைத்தனர். அணைத்துவிட்ட பிறகு அந்த மூன்று பேரின் உடல் முழுவதும் தீக்காயங்கள் நிரம்பி இருந்தன.



இருவர் பலி


பின்னர் உடனடியாக தீக்காயமடைந்த அந்த மூன்று பேரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மூவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் சுதிர் டோங்கரே, திலிப் கோப்ரகடே ஆகிய இருவரும் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் பலியாகினர்.


வழக்குப் பதிவு


அவர்களுடன் தீக்காயம் அடைந்த மற்றொருவரான சுதாகர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்து உள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதி சடங்கில் கலந்துகொண்ட 2 பேர் தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.