உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் திருமணமான மூன்றாம் நாளில் கணவருக்கு ஆண்மை தன்மை இல்லை என மணப்பெண் விவாகரத்து கோரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அம்மாநிலத்தில் உள்ள கோரக்பூர் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. அங்கிருக்கும் சஹ்ஜன்வாவில் வசிக்கும் விவசாயி ஒருவர் மிகவும் வசதி படைத்தவர். இவரின் ஒரே மகனான 25 வயதுடைய இளைஞர் கோரக்பூரில் உள்ள தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் தொழில்துறை பிரிவில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் மிக தீவிரமாக பெண் தேடினர்.
அதன்படி பெலியாபர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அந்த இளைஞனுக்குப் பிடித்துப் போனது. இவர்களது திருமணம் நவம்பர் 28ம் தேதி மணமகள் வீட்டில் வைத்து வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது. நவம்பர் 29ம் தேதி மணமகள் தன் வீட்டில் இருந்து விடைபெற்று மணமகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி மணப்பெண்ணின் தந்தை தனது மகளைக் காண மணமகன் வீட்டிற்கு வந்துளார். அப்போது தான் இந்த பிரச்னை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மணமகன் மருத்துவ ரீதியாக திருமண உறவுகளுக்கு தகுதியற்றவர் என்பதை தன்னுடைய தந்தையை தனியாக அழைத்து தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகளின் தந்தை தனது பெண்ணை, மாப்பிள்ளை வீட்டாரிடம் கூட சொல்லாமல் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். இருதரப்பும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இரு குடும்பத்தினரும் பெலியாபரில் உள்ள பொதுவான உறவினர் வீட்டில் சந்தித்தனர். அங்கு மணப்பெண்ணின் குடும்பத்தினர், மாப்பிள்ளை குடும்பத்தினர் பல விஷயங்களை தங்களிடம் மறைத்ததாக குற்றம் சாட்டினர். மேலும் இது மணமகனுக்கு 2வது திருமணம். முதல் திருமணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. அப்போது அந்த பெண் திருமணமான ஒரு மாதத்திற்குள் இதே காரணத்தைச் சொல்லி பிரிந்து சென்றதாகவும் மணமகள் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து கோரக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணமகன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவர் மருத்துவ ரீதியாக ஆண்மை இல்லாதவர் என நிரூபிக்கப்பட்டது. அவர் தந்தையாக முடியாது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த மருத்துவ முடிவுகளை மணமகனின் தந்தை ஆரம்பத்தில் ஏற்க மறுத்து விட்டார். இதனால் மணமகள் குடும்பத்தினர் காவல்துறையை அணுகினர்.
இதன் பின்னர் இந்த பிரச்னையில் சமரசம் ஏற்அட்டது. திருமண செலவுக்காக மணமகன் குடும்பத்தினர் செலவழித்த ரூ.7 லட்சம் பணம், அனைத்து பரிசுப் பொருட்களையும் திருப்பி தர வேண்டும் என மணமகள் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.