கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்படும் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு மூச்சுவிடுவதில் பிரச்னை இருப்பதாகப் புகார் தெரிவிக்கிறார்கள். பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பிறகும் சிலருக்கு இந்தப் பிரச்னை தொடர்கிறது. மருந்து மாத்திரைகள் குணப்படுத்தினாலும் நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கச் சரியான உணவு உட்கொள்வது அவசியமாகிறது. கொரோனாவால் பாதித்த நுரையீரலை மீட்டெடுக்க என்ன உணவெல்லாம் சாப்பிடலாம்?



  1. ஆப்பிள்



வைட்டமின் C,E  மற்றும் பீட்டா கரோட்டீன் நமது நுரையீரல் இயங்க உதவுகிறது. இவை மூன்றுமே ஆப்பிளில் அதிகம் உள்ளன.


 



  1. வால்நட்



ஒமேகா-3 கொழுப்பு அமிலம் (Omega 3 Fatty acids) நிறைந்தது வால்நட். ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுப் பிரச்னைகளுக்கு எதிராக இவைச் செயல்படுகின்றன.



  1. பூண்டு


    பூண்டில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் க்ளூட்டத்தயான்(glutathione) என்னும் ஆன்டிஆக்சிடண்ட்டை உற்பத்திச் செய்கின்றன. இவை நுரையீரல் நன்றாகச் செயல்பட உதவுகின்றன.


  2. நீர்



நீரைவிட மனிதர்களுக்கு அருமருந்து வேறில்லை. கொரோனாவுக்குப் பிறகு அதிக நீர் அருந்துவது நுரையீரல் வறண்டுபோவதைத் தடுக்கும். அதனால் ஏற்படும் நுரையீரல் வீக்கம் தடுக்கப்படும். அதனால் தினமும் 8 க்ளாஸ் நீர் அருந்துவதை இந்த கொரோனா காலத்தில் வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.


 



  1. இஞ்சி



காற்று மாசினால் நுரையீரல் பாதிக்கப்படுவதால்தான் அது பலவீனமடைகிறது. இதைத்தடுக்க தினமும் உணவில் இஞ்சி சேர்த்துக்கொள்வதை அல்லது இஞ்சியைச் சாறாக அருந்துவதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அது நுரையீரலில் தங்கியிருக்கும் மாசின் கசடுகளை வெளியேற்றும்.