ஹனுமான் கோவிலுக்கு தனது சொந்த நிலத்தை நன்கொடையாக இஸ்லாமியர் ஒருவர் வழங்கியது நெகிழ்ச்சிக்குரிய சம்பவமாக கருதப்படுகிறது.உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு ஒரு உதாரணம் ஒரு உதாரணமாக பெருமைக்குரிய செயலை ஒருவர் செய்தார். இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு இஸ்லாமியர் தனக்கு சொந்தமான நிலத்தை ஹனுமான் கோயிலுக்கு வழங்கினார்.


டெல்லி-லக்னோ தேசிய சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கச்சியானி கேரா கிராமத்தில் உள்ள டெல்லி-லக்னோ NH-24ஐ அகலப்படுத்தும் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அனுமன் கோயிலின் இடமாற்றத்துக்கு காரணமாக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறாமல் இருந்தது. இதனை மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவித்தது. இதை உணர்ந்த பாபு அலி, கோயிலை அங்கு மாற்றுவதற்காக, திட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு பிகா (0.65 ஹெக்டேர்) நிலத்தை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.


கோயில் கட்டுவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) நிலம் இல்லாததால், பாபு அலியின் நிலத்தை வாங்க திட்டம் வகுக்கப்பட்டது. பின்னர், முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்த் தலையீட்டின் பேரில், முதல்வர் மூலம் பாபு அலியிடம் இந்த விவகாரம் தொடர்பாக பேசப்பட்டது. இதற்குப் பிறகு, பாபு அலி கோயிலுக்குப் பின்புறம் உள்ள தனது நிலத்தில் ஒரு பகுதியை கோயிலுக்கு வழங்க ஒப்புக்கொண்டார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு உதாரணமாக பாலி அலி தனது நிலத்தை வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.