உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் ஒரு கொலைக் குற்றவாளி குற்றம் நிரூபணமானாள் அவருக்கு ஆயுள் தண்டனையைவிட குறைந்த தண்டனை கொடுக்கக் கூடாது எனு தெரிவித்துள்ளது.


நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது குறித்து நீதிபதிகள் கூறுகையில் இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் ஒருவர் மீது பதியப்பட்ட குற்றம் நிரூபணமனமானால் அவருக்கு ஆயுள் தண்டனைக்கு குறைவான எந்த தண்டனையும் தரக்கூடாது. இபிகோ 302க்கு மரணம், ஆயுள் மற்றும் அபராதம் தான் தண்டனை. இதில் குறைந்தபட்ச தண்டனை ஆயுள் தண்டனை மட்டுமே.


மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. நந்து என்ற நந்துவா என்ற நபருகு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர் 7 வருடங்கள் 10 மாதம் தண்டனையை அனுபவித்து முடித்தபோது அவரது தண்டனைக் காலம் அவர் மீது சுமத்தப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு போதுமானது என்று கூறி அவரை விடுவித்தது. அவர் மீது 147, 148, 323, 302/34  ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.


இந்நிலையில் நந்து விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்தியப் பிரதேச அரசு மேல்முறையீடு செய்தது.
அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கொலைக்கு ஆயுளுக்குக் குறைவாக தண்டனை கிடையாது என்று தெரிவித்துள்ளது.


கொலை என்பது ஒரு மனிதரை இன்னொரு மனிதர் கொல்வது அல்லது மரணம் அடையச் செய்வதாகும். பொதுவான சூழ்நிலைகளில் கொலை ஒரு குற்றச்செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் போர், எதிர்ப்புப் போராட்டம் போன்ற சூழ்நிலைகளில் கொலை தொடர்பான ஒரு தெளிவான அற நிலைப்பாடு கடினமானது.


கொலை வழக்குகளில் கீழமை நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் போது பல நேரங்களில் இரட்டை ஆயுள் வெறும் ஆயுளாகவும், ஆயுள் தண்டனை 7 வருட கடுங்காவல் தண்டனையாகவும் குறைக்கப்படும் சம்பவங்கள் அதிகமாகவே நடக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டோருக்கு மன உளைச்சல் ஏற்படுவது இல்லை விடுதலையாகி வரும் நபர் பழிவாங்கலுக்காக மேலும் ஒரு கொலை செய்யும் போக்குகளும் நடக்கின்றன.


இந்நிலையில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


இனி கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டால் இந்த குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி மேல்முறையீடுகள் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.