மும்பையில் இந்தியாவின் மிக உயரமான கட்டிடம் உருவாகிறது. 110 தளங்கள் கொண்ட இந்த கட்டிடம் பரேல்-சேவ்ரி பகுதியில் அமையவுள்ளது. இதனை பிரிட்டனின் SRAM & MRAM Group நிறுவனம் கட்டமைக்கிறது. வெங்கட் பிள்ளை இதன் தலைமை கட்டிடக் கலைஞராக இருப்பார். 


இந்த வானுயர்ந்த கட்டிதத்தில் பல்வேறு அலுவலகங்கள், மால்கள், கடைகள், 50 பெரிய ஓட்டல்களில் கிளைகள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், சர்வீஸ் அப்பார்ட்மென்டுகள் இருக்கும். இதுதவிர ஜிம்னாஸியம், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு மையங்கள், பார்ட்டி ஹால்கள் இருக்கும்.


இந்த திட்டம் குறித்து SRAM & MRAM குழும இயக்குநர் ராகவ் கபூர் கூறுகையில், இது எங்கள் பயணத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும் எங்கள் தனிப்பட்ட வெற்றியைத் தாண்டி இது பலரையும் மகிழ்விக்கும். இந்த மெகா திட்டத்தை முன்னெடுப்பதில் நாங்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம் என்றார்.


அதுமட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற பெரிய திட்டங்களை முன்னெடுத்துள்ள எங்கள் நிறுவனத்திற்கு இது இன்னுமொரு சவால். இந்தியாவின் மிக பிரம்மாண்டமான உயரமான கட்டிடத்தை எழுப்புவதில் நாங்கள் மகிழ்ச்சி கொண்டுள்ளோம் என்றும் கூறினார்.


இதே நிறுவனம் ஒடிசாவில் விரைவில் ரூ.2 லட்சம் கோடி செலவில் விரைவில் செமி கண்டக்டர் தயாரிப்பு நிறுவனம் அமைக்கிறது. இந்தக் குழுமம் அங்கு முதலில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் பின்னர் படிப்படியாக முதலீட்டை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.


புர்ஜ் கலிஃபா:


ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ளது புர்ஜ் கலிஃபா கட்டிடம். இதன் உயரம் 828 மீட்டர் அல்லது 2,717 அடி ஆகும். மிகவும் மெல்லிய உயரமான இந்த கட்டிடம் 2010 ஜனவரி கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது இதில் 163 மாடிகள் உள்ளன. இதைச் செய்து முடிக்க ஆன செலவு அமெரிக்கா டாலர் $1.5 பில்லியன் ஆகும். 


ஷாங்காய் டவர்:


இந்தக் கட்டிடம் சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 632 மீட்டர் அல்லது 2073 அடி ஆகும். 128 மாடிகள் கொண்ட இந்த கட்டிடம் 2015 இல் திறக்கப்பட்டது. இதனை நிர்மாணிக்க செய்யப்பட்ட செலவு 15 .7 பில்லியன் சீன யுவான்கள் ஆகும்


அப்ராஜ் அல் பைத் -abraj Al bait


இந்தக் கட்டிடம் மக்காவில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டு கோபுரம் ஆகும். இது சவுதி அரேபியா நாட்டில் அமைந்துள்ளது. இதன் உயரம் 601m அல்லது 1971அடி ஆகும். இந்தக் கட்டிடத்தில் 120 மாடிகள் உள்ளன. இந்தக் கட்டிடம் 2012ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதை நிர்மாணம் செய்வதற்கான செலவு 115 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.