மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 அருகே உள்ள ரூப்டாப் ரெஸ்டாரண்டில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. 


ரெஸ்டாரண்டில் தீ விபத்து:


இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "வைல் பார்லே (கிழக்கு) பகுதியில் உள்ள ஹோட்டல் ஃபேர்மாண்டின் ரூப்டாப்பில் மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட சிறிய தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. 10 மாடி ஹோட்டலில் தீயணைப்பு நடவடிக்கை தொடங்கிய பின்னர், 70-80 பேர் படிக்கட்டு வழியாக மீட்கப்பட்டனர்" என்றார்.


மொட்டை மாடியில் 1,000-1,500 சதுர அடி பரப்பளவில் உள்ள ஏர் கண்டிஷனிங் (ஏசி) யூனிட் மற்றும் எக்ஸாஸ்ட் டக்டிங்கிற்குள் தீ பரவியது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள், மூன்று தண்ணீர் டேங்கர்கள் மற்றும் பிற உதவிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.


கடந்த 2022ஆம் ஆண்டு, மும்பை அந்தேரியில் கடைவீதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்த கட்டடத்தில் இருந்து பெரும் புகை மூட்டம் வெளியேறியது வீடியோவாக பரவி வைரலானது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 


இதையும் படிக்க: St Thomas Mount Railway Station: சென்னையின் புதிய போக்குவரத்து மையம்.. ஏர்போர்ட் லெவலுக்கு மாறும் பரங்கிமலை ரயில் நிலையம்..!