நவராத்திரி விழா இம்மாததின் 26ஆம் தேதி தொடங்கியுள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் விருப்பப்படி, ஆறு முதல் பத்து நாட்கள் வரை கொண்டாடுகின்றனர். நவராத்திரி வந்து விட்டாலே, அதனை கொண்டாடும் மக்களிடத்தில்  விழாக்கோலம் பூண்டு விடுவது இயல்புதான்.


துர்க்கா பூஜைக்குப் பிறகு நீர்நிலைகளில் பாதி மூழ்கிய அல்லது மிதக்கும் சிலைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கவோ, பரப்பவோ அல்லது வெளியிடவோ கூடாது என மும்பை காவல் துறை எச்சரித்துள்ளது. 


நேற்று, அதாவது செப்டம்பர் 26-ஆம் தேதி மும்பை காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், துர்கா பூஜைக்குப் பின்னர், நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அப்போது பாதி கறைந்த மற்றும் பாதி மூழ்கிய துர்க்கா தேவியின் சிலைகளை புகைப்படம், வீடியோ எடுக்கவும், பகிரவும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதால், இதனால் ஏற்படும் சிக்கல்களையும், பிரச்னைகளையும் தவிர்க்கவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக மும்பை காவல் துறை சார்பில் அறிவிக்கப்படுள்ளது. 


மேலும், இது குறித்து காவல் துறை துணை கண்காணிப்பாளர் கூறியுள்ளதாவது, பாதி மூழ்கிய, சரியாக கரையாத, துர்கா தேவியின் சிலைகளை புகைப்படம் எடுப்பதோ, வீடியோ எடுப்பதோ அதனை சமூக வலைதளங்களில் பகிர்வதோ கூடாது. அதேபோல், மாநகராட்சி பணியாளர்கள், பாதி கரைந்த சிலைகளை எடுத்து மீண்டும் கரைக்க எடுத்துச் செல்வதையும் புகைப்படம் எடுக்க கூடாது.  இவ்வாறு செய்வதால் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டு, சமூக அமைதிக்கும் குந்தகம் ஏற்படாமல் இருக்கவே இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எனவும் கூறியுள்ளார். மேலும், அவ்வாறு பகிர்ந்து அதனால் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க 144 உத்தரவு பிறபிக்க வேண்டி இருக்கும். எனவே அப்படியான அசாதாரண சூழல் ஏற்படாதவாறு பொதுமக்கள்  ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


அதேபோல், காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களின் செல் போன் பறிமுதல் செய்யப்படலாம், அல்லது தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் எனவும் காவல் துறை தனது அறிவிப்பில் கூறியுள்ளது.


மேலும், இந்த அறிவிப்பு குறித்து பொது இடங்களில்,  வாகனங்களில் ஒலிபெருக்கியால்  மும்பை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் இந்த தடை உத்தரவானது, அக்டோபர் 5 முதல் அக்டோபர் 7 வரை அமலில் இருக்கும் எனவும் காவல் துறை தரப்பில்  கூறப்பட்டுள்ளது. 


நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் இறுதியில் நீர் நிலைகளில் கறைக்கப்படுவதற்கு முன்னர் நடக்கும்  துர்க்கா தேவி பூஜையின்போது, இது தவிர துர்கா பூஜையின் போது துர்கா பூஜையின் போது நவ்கன்யாக்கள் எனப்படும் ஒன்பது இளம் கன்னிப் பெண்களை வணங்க வேண்டும் என்றும் நம்பப்படுகிறது. ஒரு நாட்டி (நடனக் கலைஞர்/நடிகை), வைஷ்யா (பாலியல் தொழிலாளி), ராஜகி (சலவைப் பெண்), ஒரு பிராமணி (பிராமணப் பெண்), ஒரு சூத்திரன், ஒரு கோபாலா (பால் பணிப்பெண்) நவகாண்யாக்கள் என்று அழைக்கப்படும் பெண்கள். நம்பிக்கையின்படி, இந்தப் பெண்களுக்கு மரியாதை செலுத்தாமல் பத்து ஆயுதம் கொண்டுள்ள துர்கா தேவி வழிபாடு முழுமையடையாது.