Mumbai Old Tunnel:  மும்பை ஜே.ஜே மருத்துவமனையின் கீழ் 132 ஆண்டுகள் பழமை வாய்ந்த 200 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை ஜே.ஜே.மருத்துவமனை


மும்பை நகரின் பைகுல்லா பகுதியில் ஜே.ஜே. அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை மும்பையில் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. கடந்த 1845 ஆம் ஆண்டு சர்ஜாம்ஷெட்ஜி ஜே.ஜிபாய் என்பவர் நினைவாக அவர் பெயரில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த மருத்துவமனை உடன் நர்சிங் கல்லூரி ஒன்றும் இணைந்து செயல்பட்டு வருகிறது. பிரபலமான மருத்துவமனை என்பதால் இங்கு ஏராளமானோர் வந்து செல்வது வழக்கமான ஒன்றாகும். 


132 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுரங்கப்பாதை 


இந்த நிலையில், நர்சிங் கல்லூரியின் ஒரு பகுதியில் ஒரு துளை ஒன்றை மருத்துவமனை ஊழியர்கள் கண்டு பிடித்தனர். புதியதாக தென்பட்ட துளையை உற்று பார்த்தபோது உள்ளே சுரங்கப்பாதை இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜே.ஜே.மருத்துவமனை டீன் பல்லவி சாப்லேவுக்கு மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்த டீன் பல்லவி சாப்லே நேரில் ஆய்வு செய்தார். ஆய்வு செய்ததில் 200 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை இருப்பது தெரியவந்தது. இதனை பார்த்து சம்பவ இடத்தில் உள்ளவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.


மேலும் இது குறித்து ஜே.ஜே.மருத்துவமனை  டீன் பல்லவி சாப்லே கூறியதாவது, "மும்பை ஆட்சியர் மற்றும் மகாராஷ்டிரா தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு இந்த சுரங்கப்பாதை குறித்து தகவல் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்துவார்கள் என தெரிவித்தார்.  இந்த சுரங்கப்பாதையில் செங்கற்களால் கட்டப்பட்ட தூண்கள் இருப்பதாகவும், சுரங்கத்தில் நுழைவுப் பகுதியில் பாறைக் கற்களால் மூடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை மகளிர் மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவின் கீழ் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆய்வு நடத்தப்படும்


இந்த சுரங்கப்பாதையில் 1890 ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் இந்த சுரங்கப்பாதை கட்டடப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தொல்லியல் துறை உரிய ஆய்வு நடத்தும் எனவும் கூறப்படுகிறது. 132 ஆண்டுகள் பழமைவாய்ந்த சுரங்கப்பாதை மருத்துவமனையின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருந்தது.


மேலும் படிக்க


Engineering Classes: பொறியியல் முதலாண்டு வகுப்பு, செமஸ்டர் தேர்வு எப்போது?- முழு அட்டவணையை வெளியிட்ட அண்ணா பல்கலை.


Rain Update: அடுத்த 4 நாட்களுக்கு இப்படியா? நவ.9 உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகணும் மக்களே..