தன்னுடன் செல்பி எடுக்க விரும்புவோர் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர் கூறியுள்ளார். 


மத்திய பிரதேச மாநிலம் கந்துவாவில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சர் உஷா தாக்கூர் கூறுகையில், “செல்பி எடுப்பதால் நிறைய நேரம் வீணடிகப்படுகிறது. இது ஒரு "நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்". செல்பி எடுப்பதால் எங்களது நிகழ்ச்சிகளில் பல மணி நேரம் தாமதம் ஆகிறது. இதனால், எந்தவொரு நபரும் ஒரு செல்பி எடுத்தாலும், பாஜகவின் உள்ளூர் மண்டலம் பிரிவின் கருவூலத்தில் ரூ .100 டெபாசிட் செய்ய வேண்டும். கட்சிப் பணிகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படலாம் " என்று அவர் கூறினார். இவரின் இந்த கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


Union IT Minister on Pegasus Project: மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்


மேலும், பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஏனெனில், பூக்களில் லக்ஷ்மி தேவி தங்கியிருப்பதால் விஷ்ணுவுக்கு மட்டுமே பூக்களை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.





"மலர்களால் மக்களை வரவேற்பதைப் பொருத்தவரை, லக்ஷ்மி தேவி அவற்றில் வசிப்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே கறைபடாத விஷ்ணுவைத் தவிர வேறு எவராலும் பூக்களை ஏற்க முடியாது. எனவே, நான் பூக்களை ஏற்கவில்லை. மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் மலர் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார் ”என்று அமைச்சர் கூறினார்.


கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு 500 ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் உஷா தாக்கூர் கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


2015 ஆம் ஆண்டில், தாகூரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சகா குன்வர் விஜய் ஷாவும், அவருடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் 10 ரூபாய் நன்கொடை அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


Raina's Uncle Killers Arrest: ரெய்னாவின் மாமா கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது!