பீகார் மாநிலம் மோதிஹரி பகுதியில் செங்கல் சூளையில் சிம்னி (Chimney) வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நிவாரண தொகை வழங்கியுள்ளனர்.
செங்கல் சூளையில் விபத்து:
பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டம், மோதிஹரி பகுதியில் உள்ள ராம்கர்வா கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. அங்கு திடீரென ஏதே வெடித்தது போன்ற சத்தம் எழுந்தது. சிம்னி வெடித்து சிதறி தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். சிலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் செங்கல் சூளை உரிமையாளர் உள்பட 6 பேர் நேற்று உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இன்றைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பிரதமர் இரங்கல்:
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளிடிட்டுள்ள டிவிட்டர் பதிவில். “ பீகார் மோதிஹரி பகுதியில் நிகழ்ந்த விபத்து வருத்தமளிக்கிறது. உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பீகார் முதலமைச்சர் இரங்கல்:
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழதவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் தொகையும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் சார்பில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை மாநில அரசு ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.