ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்குட்பட்ட பகுதி வித்யாநகர். இந்த நகரில் வசித்து வருபவர் ராஜ்யலட்சுமி. 41 வயதான இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக தனது 10 வயது மகனுடன் கடந்த 4 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். ராஜ்யலட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.


இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ராஜ்யலட்சுமியின் உறவினர் துர்காபிரசாத் என்பவர் ராஜ்யலட்சுமிக்கு  போன் செய்துள்ளார். அப்போது, ராஜ்யலட்சுமியின் 10 வயது மகன் போனை எடுத்து பேசியுள்ளான். அப்போது, அந்த சிறுவன் தனது தாய் நான்கு நாட்களாக தூங்கிக்கொண்டிருக்கிறார். நீங்கள் வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளான். இதைக்கேட்டு குழப்பமடைந்த துர்காபிரசாத், மீண்டும் விசாரித்துள்ளார். அப்போது, அந்த சிறுவன் தனது தாய் 4 நாட்களாக தூங்கிக்கொண்டிருக்கிறார் என்றே கூறியுள்ளான்.




இதைக்கேட்டு மிகவும் குழப்பமடைந்த அவர் உடனே ராஜ்யலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே ராஜ்யலட்சுமி உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், எம்.ஆர். பல்லே காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.


இந்த விவகாரத்தில் தனது தாய் உயிரிழந்தது கூட தெரியாமல் அவர் 4 நாட்களாக உறங்கிக்கொண்டுதான் இருக்கிறார் என்று அந்த சிறுவன் நினைத்துக்கொண்டு இருந்தது காவல்துறையினர் உள்பட அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது. 5ம் வகுப்பே படிக்கும் அந்த சிறுவன் நான்கு நாட்களாக தாய் உறங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டே பள்ளிக்கு சென்று கொண்டும், வீட்டில் உள்ள உணவை சாப்பிட்டுக் கொண்டும் இருந்துவந்துள்ளான்.




பின்னர், ராஜ்யலட்சுமியில் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும், இந்த மரணம் இயற்கையானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜ்யலட்சுமி மரணச் செய்தி விஜயவாடாவில் வசித்து வரும் அவரது கணவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாய் உயிரிழந்தது கூட தெரியாமல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் நான்கு நாட்களாக தாய் உறங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்து பள்ளிக்கு சென்று வந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண