தமிழ்நாடு:




  • சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு




  • சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு விரைவில் நேரடி விமான சேவை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி



  • ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுகிறது - தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

  • தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி  இன்று அறிவிப்பு -  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 

  • பால் கொள்முதல் விலையை அதிகரித்து ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த அண்ணாமலை வேண்டுகோள்

  • தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • 11 கல்லூரிகளில் தமிழ் வழி கல்வி பாடப்பிரிவுகள் நிறுத்தம் - அறிவிப்பை வாபஸ் பெற்றது அண்ணா பல்கலைக்கழகம் 

  • வளர்ச்சிப்பணிகளை கண்காணிக்க அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட  12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

  • உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்க  விஜய் மக்கள் இயக்கம் உத்தரவு 


இந்தியா:



  • உலகின் மிகப்பழமையான மொழியான தமிழ் - 3 நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி பேச்சு

  • புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத்தலைவர் திறந்து வைக்ககோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு - இன்று விசாரணை 

  • இருமல் மருந்துகளை முன்னுரிமை அளித்து பரிசோதிக்க வேண்டும் -  ஆய்வுக்கூடங்களுக்கு மத்திய அரசு உத்தரவு 

  • மோடி அரசின் அகந்தை, நாடாளுமன்ற அமைப்பேயே அழித்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி வேதனை

  • புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு - மறுபரிசீலனை செய்ய நிதியமைச்சர் வேண்டுகோள் 

  • நீதித்துறை பணி நியமனங்களில் கண்டிப்பாக இட ஒதுக்கீடு தேவை - ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் 

  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட கோரிய வழக்கு  இன்று விசாரணைஹ்

  • தேர்தல் தோல்வி எதிரொலி - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து குமாரசாமி மகன் நிகில் ராஜினாமா 

  • இந்தியாவில் ஐஎன்எஸ்.விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலில், முதல் முறையாக இரவில் தரை இறங்கிய போர் விமானம் 


உலகம்:



  • மெட்டாவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து இந்தியர்கள் உட்பட 6000 பேர் பணிநீக்கம்

  • மங்கோலியாவில் பனிப்புயல் காரணமாக 3 லட்சம் கால்நடைகள் உயிரிழப்பு 

  • கொலம்பியாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் வருகைக்கு முன்னர் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலி 

  • பாகிஸ்தானில் பல மாகாணங்களில் அறிவிக்கப்படாத ராணுவச்சட்டம் உள்ளது - இம்ரான் கான் குற்றச்சாட்டு 

  • பார்பி பொம்மை போல மாற ஆசைப்பட்டு ரூ.82 லட்சம் செலவழித்த ஆஸ்திரேலிய பெண் 


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடர்: இறுதிப்போட்டிக்கு செல்லும் 2வது அணி எது? - குஜராத், மும்பை அணிகள் இன்று மோதல் 

  • எலிமினேட்டர் போட்டியில் தோல்வி - முழு பொறுப்பு ஏற்பதாக லக்னோ அணியின் கேப்டன் க்ருணால் பாண்ட்யா வேதனை 

  • மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டித் தொடர் - இந்திய வீரர்கள் பி.வி.சிந்து. எச்.எஸ்.பினராய், ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்