தமிழ்நாடு:



  • சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு - முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் டிக்கெட் எடுக்க தேவையில்லை - தமிழக அரசு உத்தரவு

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக எஸ். வைத்தியநாதன் நியமனம்

  • அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு: பொது கலந்தாய்வு ஜுன் 1ம் தேதி தொடங்குகிறது.

  • சங்கரன் கோவில் அருகே பள்ளி வேன் - கார் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் உயிரிழந்த சோகம்

  • இன்று இரவு வானில் தோன்றும் அபூர்வ நிகழ்வு - ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் சந்திரன், வெள்ளி, செவ்வாய்

  • சென்னையில் 4 மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் 13 கோடி அபராதம் வசூல்

  • குன்னூரில் நாளை மறுநாள் பழக்கண்காட்சி - சுற்றுலா பயணிகளை கவர தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள 3.5 டன் பழரச பானங்கள்

  • கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி நடைபாலம் அமைக்கும் பணி தொடக்கம்


இந்தியா:



  • ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி

  • புதிய நாடாளுமன்றத்தில் சோழர் ஆட்சியை பறைசாற்றும் செங்கோல் வைக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

  • புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் அறிவிப்பு - பிரதமர் மோடி திறக்க எதிர்ப்பு

  • புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதாக பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு 

  • இந்தியாவில் வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப அலை நேற்றுடன் ஓய்ந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என தகவல்

  • சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய நடவடிக்கை தேவை - ஜெனிவாவில் நடைபெற்ற 76வது உலக சுகாதார மாநாட்டில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

  • ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் உட்கட்டமைப்பு பணிகள் தீவிரம்

  • ரூ.7 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் - லிவ் இன் காதலியை கொன்று உடலை கூறு போட்ட ஐதராபாத்தை சேர்ந்த நபர் கைது


உலகம்:



  • ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் துறைமுகத்தில் 14 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

  • அண்டை நாடான வங்கதேசத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலை அதிகரிப்பு - மூலப்பொருட்களின் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு

  • அமெரிக்காவில் கடும் சூறாவளி - கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி 7 பேர் படுகாயம்

  • இம்ரான் கானின் கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு திட்டம் - பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு தகவல்


விளையாட்டு:



  • நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி அபாரம் - இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதி பெற்றது.

  • துருக்கியில் நடைபெற்ற சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த 14 வயதான பரத்விஷ்ணு

  • சர்வதேச நீளம் தாண்டுதல்  போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் தங்கம் வென்றார்.