தமிழ்நாடு:
- 14 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முதலமைச்சரின் முதன்மை செயலாளராக முருகானந்தம் நியமனம்
- சென்னை கொளத்தூர் பகுதியில் ரூ.61 கோடியில் கட்டப்பட்ட மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தை திறந்து வைத்தர் முதலமைச்சர் முக ஸ்டாலின்
- வங்கக்கடலில் நிலைகொண்டு மிக தீவிரமாகி வரும் மோக்கா புயல் இன்று நண்பகலில் கரை கடக்கிறது.
- முதல்வரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை 85% அதிகரிப்பு; சமூக நலத்துறை அதிகாரிகள் தகவல்
- அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், கோயிலில் யாருக்கும் சிறப்பு மரியாதை கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
- கடந்த ஐந்து நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பழச்சாறு அருந்தி தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
- ஜெ. ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ’கர்நாடக தேர்தல் இந்திய அரசியலில் திருப்பு முனை’ - சிபிஎம் பாலகிருஷ்ணன்
- கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- தண்டையார்பேட்டை, திரு.வி.க., நகர், ஆலந்துார், பெருங்குடி மண்டலங்களில், சாலைகளில் ஐந்து நாட்களுக்கு மேல் பணிகளை துவக்காத ஒப்பந்ததாரர்களுக்கு, 42 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா:
- கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது
- 34 ஆண்டுக்களுக்கு பிறகு சாதனை வெற்றி: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி
- தேர்தலில் வெற்றிபெற அரும்பாடுபட்ட காங்கிரஸ் மாநில தலைவர் டி. கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே முதலமைச்சர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.
- "கர்நாடக தேர்தலில் வென்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள்.." - பிரதமர் மோடி..!
- மேற்கு வங்காளத்தில் 36,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
- மராட்டிய மாநிலம் அகோலாவில் 2 பிரிவினரிடையே இடையே மோதல் - 144 தடை உத்தரவு
- மேற்கு வங்காளம் அருகே இன்று மோக்கா புயல் கரையை கடக்கிறது. அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உலகம்:
- 5 நாள் மோதலுக்குப் பிறகு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது
- அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக சட்டம் இயற்றியது கலிபோர்னியா
- இம்ரான் கைது விவகாரம்: பாகிஸ்தானில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தடை நீட்டிப்பு
- அமெரிக்காவில் சீனாவின் கொரோனா மருந்து பொருட்களுக்கு சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரின் இன்றைய 60வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மதியம் 3.30 மணிக்கு மோத இருக்கின்றன.
- அதேபோல், மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு விளையாட இருக்கின்றன.
- ஐபிஎல் தொடரின் நேற்றைய டெல்லிக்கு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஹூசாமுதீன், தீபக், நிஷாந்த் வெண்கலப்பதக்கம் வென்றனர்.