தமிழ்நாடு:
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க விரைவில் அமெரிக்கா பயணம்
- தமிழ்நாட்டிற்கு நல்ல அரசியல் தலைவர்கள் தேவை - படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என த.வெ.க.தலைவர் விஜய் அழைப்பு
- இளைஞர்களிடையே அதிகரிக்கும் போதைப்பழக்கம் - தனக்கு அச்சமாக இருப்பதாக விஜய் பேச்சு
- 21 மாவட்டங்களைச் சேர்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை கௌரவித்த விஜய்
- விரைவில் மருத்துவத்துறை காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- நீட் தேர்வை கண்டித்து ஜூலை 3 ஆம் தேதி திமுக மாணவரணி போராட்டம் அறிவிப்பு
- சென்னையில் தலைமறைவாக இருந்த தேடப்படும் பயங்கரவாதி கைது
- நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுக குரல் ஒலிக்கும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி
- தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம் - அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு
- கள்ளச்சாராய விவகாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
- மாணவ, மாணவியர்களை கௌரவித்த விஜய் - அன்பு தம்பிக்கு வாழ்த்துகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு
- நீட் தேர்வு முறைகேடு - முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
- கள்ளச்சாராய வழக்கு - கைது செய்யப்பட்ட 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு
இந்தியா:
- ரத்து மற்றும் ஒத்திவைக்கப்பட்ட நெட், NCET தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிப்பு
- ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சிலிண்டர் இலவசம், குடும்ப பெண்களுக்கு ரூ.1500 மாதம் வழங்கப்படும் - மகாராஷ்ட்ரா அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
- 88 ஆண்டுகளில் இல்லாத மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் டெல்லி, பொதுமக்கள் அவதி
- டெல்லியில் பெய்த கனமழையால் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்
- டெல்லியை புரட்டிப் போட்ட கனமழை - பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி
- கர்நாடகா அருகே நின்ற லாரி மீது மினி வேன் மோதியதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
- நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர், துணை முதல்வர் கைது
- நீட் முறைகேடு குறித்து விசாரிக்ககோரி எதிர்க்கட்சியினர் அமளி - மக்களவை ஜூலை 1 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
- ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து சேவை கட்டணத்தை உயர்த்திய வோடஃபோன் நிறுவனம் - வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு
உலகம்:
- மாலத்தீவு அதிபருக்கு பில்லி சூனியம் வைத்ததாக பெண் அமைச்சர் கைது
- கடும் வெயிலால் உயிரிழக்கும் பாகிஸ்தான் மக்கள் - பலி எண்ணிக்கை 550 ஐ தாண்டியது
- இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் கைது
- நேரடி விவாதத்தில் டிரம்பை எதிர்கொள்ள முடியாமல் திணறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
- ஈரானின் அடுத்த அதிபரை தேர்வு செய்யும் பொருட்டு நடந்த தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு
விளையாட்டு:
- டி20 உலகக் கோப்பையை வெல்லுமா இந்தியா - இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - இரட்டை சதம் விளாசிய இந்திய வீராங்கனை ஷபாலி ஷர்மா