தமிழ்நாடு:



  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்வு - மேலும் 20 பேர் கவலைக்கிடம் 

  • கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை - இபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த அமைச்சர் ரகுபதி

  • கள்ளச்சாராய விவகாரத்தில் விவாதிக்கக்கோரி கோரி - சட்டப்பேரவயில் 2வது நாளாக அதிமுக வெளிநடப்பு

  • சென்னையில் காதல் தோல்வியால் விரக்தி - விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்

  • கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவின் ஆர்ப்பாட்டம் 

  • கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் தான் திமுகவினர் தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள அடையாளங்கள் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

  • கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மேலும் ஒரு சாராய வியாபாரி கைது - சிபிசிஐடி தீவிர விசாரணை

  • மெத்தனாலை போலி பில் மூலம் வாங்கி வந்தது அம்பலம் - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம் 

  • கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக மையத்துக்கு பதிலாக பூங்கா அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

  • மருத்து மருத்துவமனைகளில் இல்லை என மக்களை இபிஎஸ் குழப்புவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு 

  • சாலைகளில் 3வது முறையாக மாடுகள் பிடிபட்டால் ஏலம் விடப்படும் - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

  • த.வெ.க. தலைவர் விஜய்யின் 50வது பிறந்தநாள் - பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

  • விதிகளின் படி செயல்படும் ஆம்னி பேருந்துகள் இயங்க தடை இல்லை - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

  • ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் 

  • தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பெய்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி 


இந்தியா: 



  •  1563 மாணவர்களுக்கு இன்று நீட் மறுதேர்வு - 7 மையங்களில் நடக்கிறது 

  • முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு

  • தேர்வு முறைகேடு சட்டம் வெறும் கண் துடைப்பு நாடகம் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்

  • நீட் தேர்வு முறைகேடு புகார் - தேசிய தேர்வு முகமை தலைவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • நீட் தேர்வு முறைகேடு விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மத்திய அரசு

  • நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஜார்க்கண்டில் 6 மாணவர்கள் கைது

  • பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

  • போட்டித்தேர்வுகளை நியாயமாக நடத்தும் வகையில் கண்காணிப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு

  • பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு - இருநாட்டு உறவு குறித்து பரிசீலனை


உலகம்: 



  •  ஊழியர்களை துன்புறுத்திய வழக்கு - இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை

  • காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் பலி

  • அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

  • கருக்கலைப்பு சட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி

  • பயிர் கழிவுகளை எரிக்க வைக்கப்பட்ட தீ - அடுக்குமாடி குடியிருப்புக்கும் பரவி 11 பேர் உயிரிழப்பு


விளையாட்டு: 



  • டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி

  • டி20 உலகக் கோப்பை: இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்

  • டி20 உலகக் கோப்பை: இன்று இரவு ஆட்டத்தில் இங்கிலாந்து - அமெரிக்கா அணிகள் மோதல்