தமிழ்நாடு:



  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்வு - இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது 

  • சென்னையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிங்க் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு திட்டம் 

  • கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க சென்ற சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல் முயற்சியால் பரபரப்பு

  • 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 25 ஆம் தேதி வெளியீடு

  • கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை

  • ஒரு மாதம் ஆட்சியை கொடுத்தால் போதைப் பொருட்கள் விவகாரத்தை அடியோடு ஒழிப்போம் - அன்புமணி ராமதாஸ்

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு - 64 பேர் போட்டியிட விருப்பம்

  • கள்ளச்சாராய சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

  • கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோனதற்கு யார் காரணம் ? - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

  • கள்ளச்சாராயத்தால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

  • கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஜூன் 25 ஆம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

  • கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து சட்டசபையில் இருந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு

  • கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி - தனது 50வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்த நடிகர் விஜய்

  • கள்ளச்சாராய விவகாரத்தை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் அமளி - சட்டப்பேரவையில் இருந்து காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டனர்

  • தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை - அண்ணாமலை 


இந்தியா: 



  •  1563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு - 7 மையங்களில் நடக்கிறது 

  • வங்கதேச பிரதமர் இன்று இந்தியா வருகை - பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்

  • டெல்லிக்கு தண்ணீர் வேண்டும் - உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி 

  • திருப்பதி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய செல்போன்கள், வாட்ச்கள் ஜூன் 24ல் ஏலம் 

  • நடப்பாண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்களில் 98 இந்தியர்கள் வெப்ப அலை காரணமாக உயிரிழப்பு

  • 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்குமாறு பிரதமருக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடிதம்

  • அசாமில் கனமழை வெள்ளப்பெருக்கால் 4 லட்சம் பேர் வெளியேற்றம், 36 பேர் உயிரிழப்பு

  • யோகாவை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் - சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்


உலகம்: 



  •  சீனாவில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு - 47 பேர் உயிரிழப்பு

  • பிரேசிலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழப்பு

  • குரானை அவமதித்ததாக குற்றச்சாட்டில் பாகிஸ்தானில் சுற்றுலா பயணி எரித்துக் கொலை

  • சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.9.771 கோடியாக சரிவு 

  • இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு 


விளையாட்டு: 



  • டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணியை டிஆர்எஸ் முறையில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 

  • டி20 உலகக்கோப்பை: இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் - இந்தியா அணிகள் மோதல்