தமிழ்நாடு:



  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க ஆணை.

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம்.

  • கள்ளச்சாராயம் சம்பவத்தும் காரணமானவர்களை கைது செய்யக்கோரி வருகின்ற 24ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.

  • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 43 பேர் உயிரிழப்பு; 32 பேர் கவலைக்கிடம் என தகவல்.

  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக 4 பிரிவுஜ்களில் சிபிசிஐடி வழக்குப்பதிவு.

  • மதுவிலக்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

  • கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார்.

  • கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 28 வரை அவகாசம்.

  • உதகை அருகே தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தில் புலி புகுந்ததால் பரபரப்பு.

  • கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் திடீர் சோதனை நடத்த டிஜிபி உத்தரவு


இந்தியா: 



  • நீட் வினாத்தாள் கசிவை தடுப்பதில் பிரதமர் மோடியின் அரசு தோல்வி அடைந்துவிட்டது என ராகுல் காந்தி எம்.பி குற்றச்சாட்டு.

  • மக்களவை தற்காலிக சபாநாயகராக பர்துருஹரி மஹ்தப் நியமித்து குடியரசு தலைவர் முர்மு உத்தரவு.

  • நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்.

  • நீட் தேர்வு வினாத்தாளை விலைக்கு வாங்கியதாக பீகாரை சேர்ந்த மாணவர் வாக்குமூலம்.

  • நுழைவுத் தேர்வு நடத்தும் உரிமையை மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும் என ப.சிதம்பரம் பேச்சு.

  • மலாவி, ஜிம்பாப்வே நாடுகளுக்கு 2,000 டன் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

  • மக்களவை எதிர்க்கட்சி தலைவரை காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் என சரத்பவார் தகவல்.

  • ஒடிசா சட்டப்பேரவை தலைவராக சுரமா பதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • செகந்திரபாத்: ஹைதராபாத் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெட்டிகள் எரிந்தன.

  • டெல்லியில் வெப்ப அலை பாதிப்பால் 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்த சோகம். 


உலகம்: 



  • காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37, 431 ஆக உயர்வு.

  • பாகிஸ்தான்: ஷரீப் புரா என்ற பகுதியில் வீட்டில் லேப்டாப் வெடித்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு.

  • அட்லாண்டிக் கடற்கரை அருகே தவித்த 91 அகதிகளை மொராக்கோ கடற்படையினர் மீட்டனர்.

  • ரபாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனிய வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு.

  • சவுதி அரேபியா: மெக்காவில் வெப்ப அலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது.

  • நேட்டோவின் பொதுச் செயலராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் அரசியல் ஆலோசகர் கடத்தப்பட்டதால் பரபரப்பு


விளையாட்டு: 



  • டி20 உலகக் கோப்பை 2024ன் சூப்பர் 8ல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் தொடர்பான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

  • இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சன் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி