குஜராத்தின் மோர்பி தொங்கும் பாலம் இடிந்து விழுந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 


குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் மீது ஒரு நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 6.30 மணியளவில் பாலம் யாரும் எதிர்பாராத விதத்தில் இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் மீது நின்றிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் நீரில் மூழ்கினர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் , அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






இதே போல பாலம் இடிந்து விழுந்ததும் ஆற்றில் விழுந்தவர்களுள் சிலர் உடனடியாக இடிந்து விழுந்த பாலத்தின் ஒரு பகுதியை நோக்கி நீந்தி செல்லும் காட்சிகளும் வெளியானது, பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரையில் குழந்தைகள் உட்பட்  141 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுள் 12 பேர் ராஜ்கோட் பகுதியின் பாகஜ எம்பி மோகன் குந்தாரியாவின் உறவினர்கள் என்பது தெரிய வந்துள்ளது






குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இன்று காலை செய்தியாளர் சந்திப்பில், பால கட்டுமான ஏஜென்ஸிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மச்சு ஆற்றில் மீட்புப் பணி கடைசி கட்டத்தில் உள்ளது. அது விரைவில் முடிவடையும்” என தெரிவித்துள்ளார்.


ஒரு அறிக்கையின்படி, NDRF இன் 5 குழுக்கள், SDRF இன் ஆறு படைப்பிரிவுகள், விமானப்படையின் ஒரு குழு, இராணுவத்தின் இரண்டு நெடுவரிசைகள் மற்றும் இந்திய கடற்படையின் 2 குழுக்கள்  இது தவிர உள்ளூர் மீட்புக் குழுக்களும் தொடர்ந்து மீட்பு பணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






பழமையான தொங்கு பாலம்   ஐந்து நாட்களுக்கு முன்பு விரிவான பழுது மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் யாரும் எதிர்பாராத வகையில் பாலம் இடிந்து விழுந்ததில் அதில் இருந்த பலர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாலத்தில் இருந்த சிலர் வேண்டுமென்றே குதித்ததாகவும், அங்கிருந்த கம்பிகளை இழுத்துப்பார்த்ததாகவும் நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். பாலம் இடிந்து விழுந்ததில், 304 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை), 308 (இறப்பை ஏற்படுத்திய வேண்டுமென்றே செயல்) மற்றும் 114 (குற்றம் செய்யும்போது தூண்டியவர்) ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.