நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியும் தீவிர பரபப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.


பா.ஜ.க. சங்கல்ப் யாத்ரா:


மக்களவைத் தேர்தலுக்காக பா.ஜ.க. சார்பில் சங்கல்ப் விகாஸ் யாத்ரா நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது மொரதாபாத். இந்த நகரில் உள்ளது தேவபூர் கிராமம். இந்த கிராமத்தில் பா.ஜ.க.வின் சங்கல்ப் யாத்ரா விகாஸ் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். இதில், உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் உள்பட பலரும் இடம்பெற்றிருந்தனர்.


இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் விழா மேடையின் மீது போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்து முறையாக முன்னறிவிப்பு விடுக்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினருக்கும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருடைய ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி தகராறாக மாறியது. இதனால் மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்.






துப்பாக்கிச் சூடு:


அப்போது, இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர் திடீரென தனது கையில் இருந்த துப்பாக்கியால் பா.ஜ.க. தலைவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக பா.ஜ.க. தலைவர் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பினார். மேலும், அவர் துப்பாக்கியால் சுட்டதில் கூட்டத்தில் இருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.


இதனால், கூட்டத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.


தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துப்பாக்கியால் சுட்ட நபர் வைத்திருந்த துப்பாக்கிக்கு அவரிடம் முறையான அனுமதி இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பா.ஜ.க. நடத்திய நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் மீது துப்பாக்கியால் சுட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Milind Deora: காங்கிரசில் இருந்து வெளியேறிய முக்கியப் புள்ளி! தேர்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சர் தந்த ஷாக்!


மேலும் படிக்க: Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பந்தளில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி..