மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்கானில் ஒரு விநோதமான சம்பவம் பதிவாகியுள்ளது. குரங்குகள் சுமார் 250 நாய்களை இதுவரை கொன்றதாகக் கிராம மக்களால் கூறப்படுகிறது. 


கடந்த மாதம் முதல் குரங்குகள் நாய்க்குட்டிகளை கொன்று குவித்து வருகின்றன. இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் வனத்துறையினரை தொடர்புகொண்டு அப்பகுதியில் உள்ள குரங்குகளை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்களால் ஒரு குரங்கைக்கூட பிடிக்க முடியவில்லை.


கிராமத்தில் வசிக்கும் சீதாராம் நைபால் என்பவரின் நாய்க்குட்டியும் சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பு குரங்கு ஒன்றால் தாக்கப்பட்டது.அந்த  நாய்க்குட்டி கத்தத் தொடங்கியதால், நைபால் அதனை காப்பாற்றினார். அதே சமயம் நாயை காப்பாற்றும்போது இவருக்கு கால் முறிந்து. எனவே அவர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார்.


குரங்குகளின் கோபத்துக்கு என்ன காரணம்?


இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சில நாய்கள் குட்டி குரங்கைக் கொன்றன. பின்னர் குரங்குகள் அந்த பகுதியில் உள்ள நாய்களை கொடூரமான முறையில் கொல்லத் தொடங்கின. இதுவரை 250 நாய்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துள்ளன என்றனர். சிறு நாய்க்குட்டிகளை தூக்கிச்செல்லும் குரங்குகள் மொட்டை மாடுகளில் இருந்தும், மரத்தின் உச்சியில் இருந்தும் தள்ளிவிட்டுக் கொல்வதாகவும் தெரிவித்துள்ளனர் பீட் மாவட்ட மக்கள். இந்த தாக்குதல் கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.




செப்டம்பரில், இதேபோன்ற மற்றொரு குரங்கு எதிர்பாராத செயலைச் செய்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.. சிக்கமகளூர் மாவட்டம் கொட்டிகெஹாரா கிராமத்தில் உள்ள குரங்கு ஒன்று, கிராம மக்களைப் பழிவாங்க 22 கிலோமீட்டர் பயணம் செய்தது.


பள்ளி வளாகத்தில் குரங்கு சுற்றித் திரிந்ததையடுத்து, கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 30-க்கும் மேற்பட்டோர் கொண்ட குழு 3 மணி நேரத்துக்குப் பிறகு குரங்கை சிக்க வைத்தனர். கிராமத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலூர் வனப்பகுதியில் குரங்கு விடப்பட்டது.


ஆனால் அந்த குரங்கு வனப்பகுதிக்கு அருகே சாலை வழியாக சென்று கொண்டிருந்த லாரியில் குதித்து எப்படியோ ஒரு வாரத்தில் கிராமத்தை அடைந்தது. குரங்கு இரண்டாவது முறையாக பிடிபட்டு காட்டுக்குள் விடப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: சீமான் மீது திமுக ஐடி விங்க் சார்பில் புகார்: மேடையில் செருப்பை காட்டிய விவகாரம்!


‛போலீஸ் படமாக எடுக்க நினைக்கவில்லை... ஆனால் அது அமைந்துவிட்டது’ -வலிமை பற்றி ஹெச். வினோத் சிறப்பு பேட்டி!