இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 12ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த ஒருவருக்கு, குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளாதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய சுகாதாரக் குழு உடனே கேரளா செல்வதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் குரங்கு அம்மை தொடர்பான
அதேநேரத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு உள்ளான நபரின் உடல் நிலை சீராக இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டிருந்த நிலையில் அது தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்தது.
கொரோனா பெருந்தொற்றே இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது பரவி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. மேலும், மருத்துவக் கழிவுகள் மூலமும், நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்தும் மனிதர்களுக்கு பரவும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தற்போது கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் நிபுணர் குழு கேரளா விரைந்துள்ளது. மேலும், குரங்கு அம்மை பரவலை தடுக்க கேரள அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்