கடந்த செவ்வாய்க்கிழமை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய மூன்றாவது முனையத்தில் குரங்கு ஒன்று உள்ளே புகுந்து விளையாட துவங்கியது. சிமியன் வளாகத்தில் உள்ள ஸ்பாவுக்குள் புகுந்து, பூ தொட்டிகளை உடைத்து செடிகளை சேதப்படுத்தி, வாழைப்பழங்களை சாப்பிட்டு பயணிகளை பயமுறுத்தியது. அதனை பிடிக்க அங்கிருந்த அலுவலர்கள் ஓடி துரத்திக்கொண்டிருந்தனர். ஆனால் அதுவே மாலை ஆனதும் எங்கோ ஓடிவிட்டிருந்தது. 




 


மதியம் 12.30 மணியளவில் ஒரு ஸ்பாவின் உள்ளே ஜன்னல் வழியாக குரங்கு உள்ளே நுழைந்தது. ஸ்பாவில் சில நிமிடங்கள் இருந்துவிட்டு பின்னர் பயணிகள் காத்திருப்பு பகுதிக்கு வெளியே சென்றது. "அது விமான நிலையம் வழியாக செடிகள் மற்றும் பூ தொட்டிகளை உடைத்து, போர்டிங் கேட் ஒன்றின் அருகே உள்ள தூணில் நின்றுகொண்டது. அது அருகில் உள்ள கம்பத்தைப் பயன்படுத்தி தூணில் ஏறியது. குரங்கை பயமுறுத்தி விரட்ட முயன்றும் அது அசைந்து கொடுக்க மறுத்ததால் பயணிகள் எச்சரிக்கை அலாரத்தை அடித்தனர்” என்று ஒரு விமான நிலைய அதிகாரி கூறினார். பிற்பகல் 3 மணியளவில், விமான நிலைய அதிகாரிகளுக்கும் வனவிலங்கு பாதுகாப்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விலங்குகளைத் தேடத் தொடங்கினர். குரங்கைத் தேடி குறைந்தது ஐந்து அதிகாரிகள் விமான நிலையத்தைச் சுற்றிச் சென்றனர், எவ்வளவு முயன்றும் குரங்கை கண்டுபிடிக்க முடிய வில்லை. ஆனால் அது மறைவதற்கு முன்பு, வளாகத்தில் உள்ள ஒரு கடையிலிருந்து ஒரு சில வாழைப்பழங்களைப் எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது.



குரங்கு கட்டிடத்தை விட்டு வெளியேறியது என்ற நம்பிக்கையில், விமான நிலைய அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்ட பிறகு, கடைக்காரர் மாலை 5.30 மணியளவில் விமானப் பக்கத்திற்கும் விமான நிலையத்திற்கும் இடையில் உள்ள வென்டிலேட்டர் பகுதியில் குரங்கை கண்டார். இந்த குரங்கு விமான இயங்குதளத்திற்கும் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இரவு வரை, குரங்கு வளாகத்தை விட்டு வெளியேறியதா என்பதை விமான நிலைய அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டின் ஏர்போர்ட் ஆபரேட்டர் "3வது முனையத்தில் குரங்கால் எந்த இடையூறும் ஏற்படவில்லை. அனைத்து செயல்பாடுகளும் சரியாகவே உள்ளன." என்று கூறினார்.