மிசோரம் மாநிலம் லுங்லேய் மாவட்டத்திற்கு உட்பட்ட தங்கபுய் கிராமத்தில் முதலாம் வகுப்பு மாணவியின் சீருடையை கழற்றியதாக அரசு நடத்தும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வ சிக்ஷா அபியானின் கீழ் பணியமர்த்தப்பட்ட லால்பியாகெங்கி என அடையாளம் காணப்பட்ட ஒப்பந்தப் பெண் ஆசிரியை மீது, சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த பள்ளியில், முதலாம் வகுப்பு சிறுமியை சிறுவன் ஒருவன் துன்புறுத்தியதாகவும் பள்ளி நிர்வாகம் பாகுபாடு காட்டியதாகவும் இதையடுத்து, சிறுமியை பள்ளியிலிருந்து அழைத்து சென்றுவிடுவேன் என தாயார் ஆசிரியையை மிரட்டியதாகவும் இதையடுத்து இச்சம்பவம் நிகழ்ந்ததாக சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார்.
மாவட்ட குழந்தைகள் நலக் குழுவால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் லால்பியாகெங்கி கைது செய்யப்பட்டதாக எஸ்பி ரெக்ஸ் வான்சாங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, தனது மகள் பள்ளியில் சிறுவன் ஒருவரால் உடல்ரீதியாக தாக்கப்பட்டதாகவும், அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் சிறுமியின் தாய் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், "மூன்று நாள்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் பள்ளிக்குச் செல்வேன் என அவர் அடம் பிடித்ததால், அவரைப் பள்ளிக்கு அனுப்பினோம். வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) அதே பையனால் மீண்டும் அவர் துன்புறுத்தப்பட்டார்.
தனது மகளை மீண்டும் துன்புறுத்திய அச்சிறுவன் அடித்ததை அறிந்த அவரது தாய் ஆத்திரமடைந்து வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்று சிறுவனை திட்டியுள்ளார். மதியம், ஆசிரியரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பையனை திட்டியதன் மூலம் நான் விதிகளை மீறினேன் என்று அவர் என்னிடம் சொன்னார்.
இதனால் கோபமடைந்த அந்த பெண், தனது மகளை வீட்டிற்கு அழைத்து வர மீண்டும் அவர் பள்ளிக்கு சென்றார். தனது மகளை பள்ளியை விட்டு வெளியே அழைத்து சென்றுவிடுவதாக மிரட்டி உள்ளார். தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினால், ஒரு மாணவனுக்கு சீருடை தேவைப்படுவதாகவும் எனவே அவரது சீருடையை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் ஆசிரியை கூறினார்.
"ஒட்டு மொத்த வகுப்பின் முன்னால் எனது மகளின் சீருடை கழற்றப்பட்டது. உள்ளாடையுடன் அவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார" என சிறுமியின் தாயார் கூறினார்.