மகாராஷ்டிராவில் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, ஒரு சிறுவன் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக குறைந்த தீவிரம் கொண்ட வெடிமருந்தை சேகரித்து, அதை கூரியர் பார்சலில் அனுப்பியதாகக் கூறப்படும் சிறுவன் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.


இந்த வார தொடக்கத்தில் ஒரு கூரியர் நிறுவனத்தின் அலுவலகத்தில் பார்சல் தீப்பிடித்தது, பீதியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் போலீஸ் அலுவலர் தெரிவித்துள்ளார். கூரியர் நிறுவனம் காவல்துறையினரிடம் தகவல் கொடுத்ததை அடுத்து, கூரியரை அனுப்பியதாகக் கூறப்படும் சிறுவனைக் கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர்.


கூரியர் பார்சல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது, உள்ளே இருக்கும் பொருள் சேதமைடைந்தால் அதற்கு இன்சூரன்ஸ் தொகை பெற முடியும். இதை விளம்பரத்தில் கண்ட சிறுவன் மோசடி செய்து இன்சூரன்ஸ் தொகை பெற திட்டமிட்டுள்ளார்.


இணையத்தில் கிடைத்த தகவல்களைப் பயன்படுத்தி பட்டாசு, எலக்ட்ரானிக் பேட்டரி மற்றும் மொபைல் போன் ஆகியவற்றைப் பயன்படுத்தி எலக்ட்ரானிக் சர்க்யூட்டை சிறுவன் தயாரித்துள்ளான். வெடிமருந்தை வெடிக்க வைக்க மொபைல் ஃபோனை பயன்படுத்தியுள்ளார்.


இரண்டு கணினி செயலிகள், ஒரு மொபைல் போன், மெமரி கார்டு என மொத்தம் ₹ 9.8 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள போலி விலைப்பட்டியல்களை உருவாக்கி, இன்வாய்ஸ்களைப் பயன்படுத்தி இந்தப் பொருட்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கி இருக்கிறார்.


பின்னர், அந்த கருவியை பார்சலில் அடைத்து டெல்லியில் உள்ள போலி முகவரிக்கு அனுப்ப முன்பதிவு செய்துள்ளார். புறநகர் சாண்டாகுரூஸில் உள்ள அவரது வீட்டில் இருந்து கூரியர் நிறுவன ஊழியர் ஒருவரால் இந்த பாக்கெட் சேகரிக்கப்பட்டது. ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்தில், செவ்வாய்கிழமை அன்று அந்த பார்சல் தீப்பிடித்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 285 (தீ அல்லது எரியக்கூடிய விஷயங்களில் அலட்சியமாக நடந்துகொள்ளுதல்), 336 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்), மற்றும் 435 (நெருப்பு அல்லது வெடிமருந்துகளால் ஏற்படும் தீமை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


சிறுவன் சிறார் நீதிச் சட்டத்தின்படி ஜூலை 27 வரை குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை அலுவலர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண