சமூக மாற்றத்திற்கான அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கிலும் சமூகங்களை ஈடுபடுத்தும் வகையிலும் யுனிசெப் அமைப்புடன் மத்திய அரசு கைக்கோர்த்துள்ளது. இதுதொடர்பான ஒத்துழைக்க ஆவணத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) இந்தியா கையெழுத்திட்டுள்ளன.


இந்திய அரசுடன் கைக்கோர்த்த யுனிசெப் அமைப்பு:


தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் களப்பணியாளர்கள் மற்றும் ஊரக சமுதாயங்கள் இடையே பயனுள்ள தகவல் தொடர்புக்கான வழிமுறைகளை அமைத்து நிறுவனமயமாக்குவதை இந்த கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மக்களுடன், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்துவதன் மூலமும், கிராமப்புற மக்களுக்கு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதன் மூலமும் உள்ளூர்மயமாக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த இந்த ஒத்துழைப்பு உதவும்.


கிராமப்புற இந்தியாவுக்கு அடிச்சது ஜாக்பாட்:


தகவல் தொடர்பு மற்றும் பின்னூட்ட முறைகளை மேம்படுத்துவதன் மூலம், முக்கியமான அரசின் கொள்கைகள் கிராமப்புறங்களை விரைவாகவும் திறம்படவும் சென்றடைவதை உறுதி செய்வதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.


இந்த முயற்சி கிராமப்புற மக்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், சேவை வழங்கலை மேம்படுத்தவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மேலும் உள்ளடக்கிய மற்றும் இணைக்கப்பட்ட கிராமப்புற இந்தியாவுக்கு பங்களிக்கவும் உதவும்.


190 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க தேவையான ஊட்டச்சத்து, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றைச் சென்று சேர்க்கிறது UNICEF அமைப்பு.


ஆனால், சேவைகளின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவது தானாகவே குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்தாது. பல்வேறு காரணங்களுக்காக, குழந்தைகள் செழிக்க உதவும் சேவைகளில் இருந்து பயனடைய அவர்களை பராமரிக்கிறவர்கள் சிரமப்படலாம்.


சில நேரங்களில் ஒரு திட்டத்தின் மதிப்பு சுயமாகத் தெரிவதில்லை. நடத்தைகளை மாற்ற அறிவை மாற்றுவது போதாது என்பதை UNICEF அங்கீகரிக்கிறது. அதனால்தான், குடும்பங்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களின் பலத்தை அடையாளம் காண்பதற்கும், நேர்மறையான மாற்றத்திற்கான தடைகளைக் குறைப்பதற்கும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது UNICEF அமைப்பு.