தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. 


இதற்கிடையே, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஜாவத் புயல்  வலுவிழந்து வருவதாகவும், காற்றழுத்த தாழ்வு மையாமாக நாளை நண்பகல் பூரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதுமேலும் வலுவிழந்து, மேற்குவங்க கடற்பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     


 






 


இந்நிலையில், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கான்ஸ் மற்றும் மேதினாபூர்  மாவட்டங்களில்  கனமலை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கடற்கரைப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.   


 






 


ஆந்திரா, ஒடிஸா மற்றும் மேற்குவங்க ஆகிய மூன்று மாநிலங்களிலும் புயல் பாதிப்புகளை குறைப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறித்தியுள்ளது. மூன்று மாநில அரசு அதிகாரிகளுடன் உரையாடிய மத்திய தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல்," மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்வதுடன், மின்சாரம், தொலைத்தொடர்பு, சுகாதாரம், குடிநீர் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். புயலால் இந்த சேவைகள் பாதிக்கப்படும் போது, உடனடியாக அதனைச் சரிசெய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில்  CII, FICCI, ASSOCHAM போன்ற தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 


இந்த மூன்று மாநிலங்களிலும் கடற்படை மற்றும் கடலோர காவல்படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.