தமிழ்நாடு: 


தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார். இவர் ஆந்திர முதலமைச்சராகவும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆளுநராகப் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.      


அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகின்றனர்!


தமிழகத்தில் இந்த நோய் தொற்று தடுப்பு மருந்து செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
மாலை 4.30 மணி நிலவரப்படி, 15  லட்சத்திற்கும் கூடுதலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 


வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த நான்கு பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இருப்பினும், இந்த நால்வருக்கு ஒமிக்ரான் பாதிப்ப் இருக்க வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்தார்.  


உருமாறிய கொரோனா ஒமிக்ரான் கண்காணிப்பு குறித்து தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.  


இந்தியா: 


கடற்படை தினத்தை முன்னிட்டு இந்தியக் கடற்படை வீரர்களுக்கு ப் பிரதமர்  நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இலவசத் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என குடியரசுத் துணைத்தலைவர் கேட்டுக் கொண்டார். அரிய வளங்களை சமச்சீராகவும், பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். 


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்  8,603 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.8,190 பேர் குணமடைந்துள்ளனர் 


குற்றம்: 


தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவின் கழிவறையில் பெண் சிசு  இறந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 


சென்னை எம்.கே.பி நகரில்,  செயின் மற்றும் வலையல்களை உங்களது மணிபர்சில் கழட்டி வைத்துக் கொள்ளுங்கள், கொரோனா  பரிசோதனை முடிந்ததும் போட்டுக் கொள்ளலாம் என கூறி 16 சவரன் நகையை திருடர்கள் கொல்லை அடித்துள்ளனர்.  


பிரபல ரவுடி வெள்ளபள்ளம் வினோத் மற்றும் அவனது கூட்டாளிக்கு 7ஆண்டுகள் சிறை


விளையாட்டு:  


ஒமிக்ரான் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அந்நாட்டில் பங்கேற்க உள்ள கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் உலக சாதனை படைத்துள்ளார்.



மும்பையில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு சுருண்டது. அஸ்வின், சிராஜ், அக்‌ஷர் படேல் அபாரமாக பந்துவீசினர்


இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி வி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில்,ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை 21-15,15-21,21-19 என்ற செட்களில் தோற்கடித்தார்.