உலகம் முழுவதும் அதிகளவில் மக்களால் கொண்டாடப்படும் விளையாட்டாக இருப்பது கால்பந்து. உலகம் முழுவதும் அதிகளவில் ரசிகர்களை கொண்டிருக்கும் கால்பந்து வீரராக வலம் வருபவர் மெஸ்ஸி. இவருக்கென்று இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கேரளா மாநிலத்தில் மெஸ்ஸிக்கும், ரொனால்டோவிற்கும் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர்.






கால்பந்து விளையாட்டின் மிகப்பெரிய திருவிழாவான உலககோப்பை கால்பந்து இந்த மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் மெஸ்ஸிக்கென்று 30 அடி உயர கட் அவுட்டை அந்த மாநில ரசிகர்கள் வைத்துள்ளனர்.


கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது புல்லவூர் கிராமம். அங்குள்ள என்.ஐ.டி. அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் அர்ஜெண்டினா ரசிகர்கள் மன்றம் ஒன்று செயல்பட்டு  வருகிறது. உலககோப்பை தொடங்குவதை முன்னிட்டு பிரத்யேகமாக ஏதேனும் செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


இதையடுத்து, மெஸ்ஸியின் தீவிர ரசிகரான இவர்கள் ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் மெஸ்ஸியின் கட் அவுட்டை வைக்க திட்டமிட்டனர். இதையடுத்து, 30 அடி உயரத்திற்கு மெஸ்ஸியின் உருவ கட் அவுட் செய்து, அதை ஊரில் உள்ள நீர்நிலை ஒன்றின் மையப்பகுதியில் வைத்துள்ளனர்.






நீர்நிலையின் மையப் பகுதியில் உள்ள மேடு ஒன்றில் மெஸ்ஸியின் 30 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 20-ந் தேதி தொடங்க உள்ள உலககோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணிக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இந்த கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. கத்தாரில் நடைபெறும் உலககோப்பை கால்பந்து தொடரில் 31 அணிகள் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 மேலும் படிக்க : அதிபர் தேர்தல் முறையை நோக்கி செல்லும் இந்தியா...நீதித்துறைக்கு பறந்த கோரிக்கை...மம்தா பானர்ஜி என்ன சொல்கிறார்?


மேலும் படிக்க : சாகசம் செய்து அசத்திய பாதுகாப்பு படை நாட்டு வகை நாய்கள்.. கைத்தட்டி ரசித்த பிரதமர் மோடி...வைரல் வீடியோ